Home நாடு 13வது பொதுத் தேர்தலுக்கு முன் புதிய சம்பளத்திட்டம்- கியூபெக்ஸ்

13வது பொதுத் தேர்தலுக்கு முன் புதிய சம்பளத்திட்டம்- கியூபெக்ஸ்

688
0
SHARE
Ad

cuepacsகோத்தாபாரு, பிப்.27- 13வது பொது தேர்தலுக்கு முன்பு முழுமையானப்  புதிய சம்பளத் திட்டத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று  பொதுச் சேவை ஊழியர் தொழிற்சங்கம் கியூபெக்ஸ் வலியுறுத்தியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் பலர் கேள்வி எழுப்புவதால் தாம் இவ்வாறு செய்வதாக அதன் தலைமைச் செயலாளர் லோக் யிம் பெங் தெரிவித்தார்.

பொதுச் சேவை ஊழியர்கள் அனைவரும் தங்கள் வருமானத்தை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்காக இது விரைவில் அறிவிக்கப்படும்.

#TamilSchoolmychoice

பொதுச் சேவை ஊழியர்கள் கூடிய பட்ச அல்லது குறைந்த பட்ச சம்பளத்தில் தங்களின் அடைவைக் காண முடியாது என்பதால் அதை விரைவில் அறிவிக்க கியூபெக்ஸ் விரும்புகிறது.

ஆகவே, 13 வது பொதுத் தேர்தலுக்கு முன்பாக இந்த அறிவிப்பை தான் எதிர்ப்பார்ப்பதாக  லோக் யிம் பெங் செய்தியாளரிடம் சொன்னார்.

கடந்தாண்டு அரசாங்கம் ரத்து செய்த பொதுச் சேவைக்கான  புதிய  பணி ஓய்வு திட்டத்தைத் தொடர்ந்து இவ்வாண்டு சம்பள அட்டவணை இல்லாத கூடிய பட்ச சம்பளத்தை ஏறக்குறைய 50,000 பொதுச் சேவை ஊழியர்கள் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.