Home நாடு (மஇகா தலைமையகத்திலிருந்து நேரடி செய்தி) – மத்திய செயலவைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் தொடங்கியது

(மஇகா தலைமையகத்திலிருந்து நேரடி செய்தி) – மத்திய செயலவைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் தொடங்கியது

489
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 18 (பிற்பகல் 1.00 மணியளவில்) – இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அறிவித்திருக்கும் மத்திய செயலவை சட்டப்படி செல்லாது என்றும், அந்தக் கூட்டம் சங்கங்களின் பதிவதிகாரியின் உத்தரவை மீறும் வகையில் கூட்டப்படுகின்றது என்றும், முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகன் தலைமையில் தற்போது மஇகா தலைமையகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமத் தொடங்கியுள்ளனர்.

MIC HQ Dec 18 - 1
மஇகா தலைமையகம் முன்பு இன்று பிற்பகல் 1.00 மணியளவில் பழனிவேலுவுக்கு எதிரான பதாகைகளுடன் திரண்ட கூட்டம்

கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற மத்திய செயற்குழு உறுப்பினர்களின் தேர்தல் செல்லாது என சங்கப் பதிவகம் அறிவித்திருப்பதால், அந்த மத்திய செயலவையைக் கொண்டு கூட்டப்படும் இன்றைய கூட்டம் சட்டப்படி செல்லாது எனக் கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் மஇகா தலைமையகத்தின் முன்பு திரண்டுள்ளனர்.

MIC HQ DEC 18 - 2
மஇகா தலைமையக வாயில் முன்பு திரண்டிருக்கும் கூட்டத்தின் ஒரு பகுதி