Home நாடு (மஇகா தலைமையகத்திலிருந்து நேரடி செய்தி) – டி.மோகன் குழுவினருடன் பழனிவேல் பேச்சு வார்த்தை

(மஇகா தலைமையகத்திலிருந்து நேரடி செய்தி) – டி.மோகன் குழுவினருடன் பழனிவேல் பேச்சு வார்த்தை

487
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 18 (பிற்பகல் 1.45 மணி) – டத்தோ டி.மோகன் தலைமையில் மஇகா தலைமையகத்தின் முன்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியுள்ள இந்த வேளையில் டி.மோகன் மற்றும் டத்தோஸ்ரீ வேள்பாரி உள்ளிட்ட குழுவினரை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் பேச்சு வார்த்தைக்கு உள்ளே அழைத்துள்ளார். 

அந்த பேச்சு வார்த்தையின்போது மோகன் குழுவினர் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ள மத்திய செயலவைக் கூட்டம் சட்டத்துக்கு புறம்பானது என்பதால் அது நடைபெறக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

MIC HQ T.Mohan speaking - Dec 18
டி.மோகன் கூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்பு உரையாற்றுகின்றார்.

அறை ஒன்றுக்குள் சென்று பழனிவேலுவுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர், டி.மோகன், வேள்பாரி குழுவினரை மீண்டும் பிற்பகல் 2.00 மணிக்கு சந்திப்பதாக பழனிவேல் கூறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice