Home உலகம் நடந்ததை மறந்துவிடுங்கள்: இலங்கை தமிழர் பகுதியில் ராஜபட்சே பிரச்சாரம்!

நடந்ததை மறந்துவிடுங்கள்: இலங்கை தமிழர் பகுதியில் ராஜபட்சே பிரச்சாரம்!

595
0
SHARE
Ad

rajpaksaகொழும்பு, டிசம்பர் 19 – இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரை மறந்து, நாட்டு முன்னேற்றத்துக்காக ஒன்றுபட வேண்டும் என இலங்கைத் தமிழர்களுக்கு அந்த நாட்டு அதிபர் ராஜபட்சே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் இதுவரை இல்லாத வகையில் மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்குப் போட்டியிடும் அவர், தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முல்லைத்தீவு நகரில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதாவது:

“ஈரான், லிபியா, எகிப்து போன்ற நாடுகளில் அரசுக்கு எதிரான போராட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுள்ளது. அதைப் போன்ற நிலை நமது நாட்டுக்கு ஏற்படக்கூடாது. நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்”.

#TamilSchoolmychoice

“நடந்தவற்றையெல்லாம் மறந்துவிட்டு, நாட்டு வளர்ச்சிக்காக தமிழர்கள் ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும்” என்றார் ராஜபட்சே. போரின் துயரங்களிலிருந்து அந்தப் பகுதி மக்கள் இன்னும் மீளாத நிலையில், தனது உரையில் விடுதலைப்புலிகளுடனான போர் குறித்து பேசுவதை ராஜபட்சே தவிர்த்தார்.