Home உலகம் பெஷாவர் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்ட தலிபான்கள்!

பெஷாவர் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்ட தலிபான்கள்!

524
0
SHARE
Ad

talibans_pics_005பெஷாவர், டிசம்பர் 19 – பெஷாவர் இராணுவப் பள்ளியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் புகைப்படங்களை தலிபான்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை, பெஷாவர் நகரில் உள்ள இராணுவப்பள்ளியில் நவீன ஆயுதங்களுடன் புகுந்த 6 பேர் கொண்ட தலிபான் தீவிரவாதிகள், மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டத்தில், 132 மாணவ, மாணவியர் உள்பட 141 பேர் அநியாயமாக கொல்லப்பட்டனர்.

மனிதத் தன்மையற்ற இந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தலிபான் இயக்கம் பொறுப்பேற்றது.

#TamilSchoolmychoice

talibans_pics_002இந்நிலையில், தலிபான்கள் அமைப்பு தாக்குதல் நடத்துவதற்கு முன் தீவிரவாதிகள் 6 பேரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. மேலும், இதுபோன்ற தாக்குதல் அங்கு தொடரும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.