Home உலகம் பெஷாவர் பள்ளிக்கு வந்த இம்ரான்கானுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு!

பெஷாவர் பள்ளிக்கு வந்த இம்ரான்கானுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு!

649
0
SHARE
Ad

imrankhan peshawar,பெஷாவர், ஜனவரி 16 – கடந்த மாதம் பெஷாவர் இராணுவப் பள்ளியில் தலிபான்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 134 குழந்தைகள் உட்பட 150 பேர் பலியாகினர்.

உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், பாகிஸ்தானை நிலைகுலைய வைத்தது. தீவிரவாதத்தை முற்றிலும் அழிக்கும் நோக்கத்துடன் தனது இராணுவத்தின் பிடியை இறுக்கி உள்ளது.

இந்நிலையில், பெஷாவர் பள்ளி சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து, அந்த பள்ளியை பார்வையிட பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர் இம்ரான் கான் மற்றும், அவருடைய மனைவி ரேஹம் கான் ஆகியோர் அங்கு வருகை தந்தனர்.

#TamilSchoolmychoice

imrankhan peshawarஅவர்களின் வருகையை அறிந்த பெற்றோர்கள், பள்ளியில் நுழைவதற்கு அவர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள், “திருமண வேலையில் சுறுசுறுப்பாக இருந்த இம்ரான் கானுக்கு ஒரு மாதம் கழித்தே இந்தப் பள்ளி கண்ணுக்கு தெரிந்துள்ளது”.

“நடந்தவையே போதும். இனி எங்கள் குழந்தைகளின் ரத்தத்தில் அரசியலைக் கலக்க விடமாட்டோம்” என்று கோஷமிட்டனர். நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதை உணர்ந்த காவல் துறையினர், இம்ரான் கானையும் அவரது மனைவியையும் பின்பக்க வாயில் வழியாக பள்ளிக்கு உள்ளே அழைத்துச் சென்றனர்.

imrankhan peshawar-இது தொடர்பாக இம்ரான்கான் கூறுகையில், “அவர்களது துயரத்தை என்னால் முழுவதும் புரிந்து கொள்ள முடிகிறது. தங்கள் குழந்தைகளை அவர்கள் இழந்துள்ளார்கள். அவர்கள் போராட்டத்தை நான் மதிக்கிறேன். ஆனால் மாணவர்களுக்கு தைரியமூட்டவே நான் வந்தேன்” என்று அவர் கூறினார்.