Home உலகம் பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை படை தாக்குதல் 20 பேர் பலி!

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை படை தாக்குதல் 20 பேர் பலி!

595
0
SHARE
Ad

newzportalபெஷாவர், பிப்ரவரி 14 – பாகிஸ்தான் ஷியா மசூதியில் தீவிரவாதிகள் தாக்கியதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

நேற்று மதியம் பெஷாவர் அருகே ஹயாதாபாத் பகுதியில் உள்ள ஷியா மசூதியில் 3 தற்கொலைப் படை தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர்.

வெள்ளிக்கிழமை தொழுகை என்பதால் ஏராளமானோர் மசூதிக்கு வந்திருந்தனர். பாதுகாப்பு படையினர் சீருடையில் வந்த தீவிரவாதிகள் காவலாளியை சுட்டுக் கொன்றதுடன், மசூதிக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

#TamilSchoolmychoice

அதில் ஒருவன் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இறந்துள்ளான். கையெறி குண்டுகளை வீசியும் தாக்கினர். அந்தப் பகுதியே புகைமண்டலமாகக் காட்சியளித்ததும், மக்கள் அலறியடித்துக் கொண்டு மசூதியிலிருந்து வெளியே ஓடி வந்தனர்.

newzportal_இதில், 20 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்து வந்து பதில் தாக்குதல் நடத்தினர்.

இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். மற்றொரு தீவிரவாதி படுகாயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டார். இத்தாக்குதல் சம்பவத்துக்கு தெக்ரிக்-இ-தலிபான் பொறுப்பேற்றுள்ளது.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அதிபர் மம்னூன் உசேன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.