இந்த இரயில் திட்டப் பணிகள் குறித்து எம்.ஆர்.டி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ சக்ரில் மொக்டர் கூறுகையில், “சுங்கை பூலோ மற்றும் காஜாங் இடையேயான செயல்திட்டப் பணிகளில், சுரங்கப்பாதைக்கான பணிகள் கடந்த டிசம்பர் மாதம் வரையில் 73 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அதேபோல் மேல்தளப் பணிகள் 49.2 சதவீதம் நிறைவடைந்துள்ளன.”
“இதற்கிடையே மலேசியா, சிங்கப்பூரை இணைக்கும் அதிவேக இரயில் திட்டமும் செயல்படுத்தப்பட இருப்பதால், அதற்கு தகுந்தாற்போல் இரண்டாவது தடத்தில் சிறு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சுங்கை பூலோ-காஜாங் இடையேயான எம்.ஆர்.டி-யின் இரண்டாவது இரயில் தடம் எதிர்வரும் மே மாதம் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிபடுத்தப்பட வாய்ப்புள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
எம்.ஆர்.டி தடம் இரண்டின் திட்டப்பணிகளில் தொடர்ந்து பல்வேறு தடைகள் வந்தாலும், அரசு இதற்காக ஒதுக்கிய 22.18 பில்லியன் ரிங்கெட்டுகள் பட்ஜெட்டில் மட்டும் எத்தகைய மாற்றமும் வராது என துணை நிதியமைச்சர் டத்தோ அகமட் மாஸ்லான் தெரிவித்துள்ளார்.