Home Featured நாடு மின்தடையால் கிளானா ஜெயா இரயில் சேவை நிறுத்தம்: பயணிகள் கடும் அவதி!

மின்தடையால் கிளானா ஜெயா இரயில் சேவை நிறுத்தம்: பயணிகள் கடும் அவதி!

896
0
SHARE
Ad

RapidKLகோலாலம்பூர் – மஸ்ஜித் ஜாமேக்கிலிருந்து அம்பாங் பார்க் வரை செல்லும்  கிளானா ஜெயா கேஎல் வழித்தடத்தில், மின்தடை காரணமாக இரயில் சேவை தடை பட்டதால், வேல்லைக்குச் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

அதோடு, கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று காலை பெய்த கனமழை காரணமாக, வாகனங்களில் செல்ல இயலாத நிலையில் தவித்த மக்கள், அருகில் இருந்த இரயில் நிலையங்களில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, இரயிலில் பயணம் செய்யும் முயற்சியில் இறங்கினர்.

எனினும், தடங்கல் காரணமாக, ஆங்காங்கே இரயில் போக்குவரத்தும் தாமதமாகவே, இரயில் நிலையம் மக்கள் வெள்ளத்தால் நிறைந்ததாக நேரில் கண்டவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இதனிடையே, மின்தடை பிரச்சினையை சரி செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள ரேபிட் கேஎல் நிர்வாகம், பாதிக்கப்பட்ட இரயில் நிலையங்களுக்கு பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.