Home Featured நாடு லங்காவி கழுகுச்சிலையைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை – பேராக் துணை முஃப்தி விளக்கம்!

லங்காவி கழுகுச்சிலையைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை – பேராக் துணை முஃப்தி விளக்கம்!

681
0
SHARE
Ad

kedah-langkawi-eagle-square_1கோலாலம்பூர் – உயிரினங்களின் சிலைகளை நிறுவுவதற்கு எதிராகத் தான் கூறிய கருத்து ஊடகங்களால் திரித்து வெளியிடப்பட்டுவிட்டதாகவும், தான் லங்காவியிலுள்ள கழுகுச் சிலையையோ அல்லது கோலாலம்பூரிலுள்ள தேசிய நினைவுச் சின்னத்தையோ குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றும் பேராக் துணை முஃப்தி ஜாம்ரி ஹாசிம் விளக்கமளித்துள்ளார்.

பேராக் மாநிலத்தில், புதிதாக விலங்குகளின் சிலைகளை அமைக்க உள்ளூர் அதிகாரிகள் தங்களிடம் ஆலோசனை கேட்டபோது, அதற்குத் தாங்கள் கூறிய ஆலோசனைகள், வேறு மாதிரியாகத் திரிக்கப்பட்டுவிட்டது என்றும் ஜாம்ரி ‘சினார்’ இணையதளத்திடம் கூறியுள்ளார்.

அதோடு, அது போன்ற சிலைகளை அகற்றவதும், வைத்திருப்பதும் அந்தந்த மாநிலங்களின் முடிவில் உள்ளது என்றும், தான் கூறிய கருத்து லங்காவியின் கழுகுச் சிலைக்கோ அல்லது கோலாலம்பூரின் தேசிய நினைவுச் சின்னத்திற்கோ தொடர்பில்லாதது என்றும் ஜாம்ரி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, கோலாலம்பூரிலுள்ள தேசிய நினைவுச்சின்னத்தைச் சுற்றி, 650 மில்லியன் ரிங்கிட் செலவில், 66 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய பூங்கா அமைக்கும் பணியை, கடந்த ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்துள்ளார் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்.

 

அது குறித்து மலேசியாகினியிடம் கருத்துத் தெரிவித்துள்ள பேராக் முஃப்தி ஹாருசானி ஜகாரியா, தேசிய நினைவுச் சின்னத்தில் இருப்பது போன்ற மனித உருவிலான நினைவுச் சின்னங்கள், இஸ்லாமைப் பொறுத்தவரையில் தடை செய்யப்பட்ட ஒன்று என்று தெரிவித்துள்ளார்.

“நாங்கள் ஆரம்பத்தில் இருந்து அதில் உடன்படவில்லை (தேசிய நினைவுச்சின்னம் கட்டுமானம்) நாம் இருப்பது இஸ்லாமிய நாட்டில். நாம் ஏன் நினைவுச்சின்னங்களை வழிபட வேண்டும்?”

“மனித உருவிலான நினைவுச்சின்னங்கள் தடை செய்யப்பட்டவை” என்று அவர் தெரிவித்துள்ளார்.