Home நாடு எல்ஆர்டி பாதுகாப்பு குறித்து ஆய்வு – பிரதமர் உத்தரவு

எல்ஆர்டி பாதுகாப்பு குறித்து ஆய்வு – பிரதமர் உத்தரவு

721
0
SHARE
Ad

LRTகோலாலம்பூர், ஜூலை 23 – இயந்திரக் கோளாறு காரணமாக நேற்று புதன்கிழமை, கோலாலம்பூரில் எல்ஆர்டி இரயில் சேவைகள் இரு முறை பாதிக்கப்பட்டதையடுத்து அதன் பாதுகாப்பு தன்மை குறித்து ஆய்வு நடத்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் உத்தரவிட்டுள்ளார்.

இரு சம்பவங்களிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதற்காக தாம் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

“பயணிகளின் பாதுகாப்புக்கு எப்போதுமே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இதற்கேற்ப இரயில் சேவை குறித்த பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்ள வேண்டும்,” என தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவர் பதிவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

புதன்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்கள் காரணமாக எல்ஆர்டி இரயில் சேவை பாதிக்கப்பட்டது.

இயந்திரக் கோளாறினால் இரயிலில் சிறிய அளவில் தீப்பற்றியது. அதனைத் தொடர்ந்து உடனடியாக பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வேறு இரயிலில் அனுப்பி வைக்கப்பட்டார்கள் என ரேபிட் இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.