Home இந்தியா உலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை இந்தியா-பாகிஸ்தான் மோதல்!

உலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை இந்தியா-பாகிஸ்தான் மோதல்!

534
0
SHARE
Ad

Untitled-1 copyஅடிலெய்டு, பிப்ரவரி 14 – உலக கோப்பை கிரிக்கெட்டில் நாளை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் மோதிய ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி தான் அதிக போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

ஆனால் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில்  இந்தியாவை பாகிஸ்தான் இதுவரை வீழ்த்தியது இல்லை. உலக கோப்பையில் இரு அணிகளும் இதற்கு முன் 5  போட்டிகளில் மோதி உள்ளன. ஆனால் அனைத்து  போட்டிகளிலும் இந்தியா வெற்றிகளை பெற்றுள்ளன.

இந்த உலக கோப்பையில் பி பிரிவில் இரு அணிகளும் இடம்பெற்றுள்ளன. தங்களது முதல் லீக் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன.

#TamilSchoolmychoice

இதுவரை  உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதில்லை என்ற வரலாறு உள்ள நிலையில், இந்த முறை  அது நீடிக்குமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கு காரணம் நடப்பு சாம்பியன் இந்தியா, கடந்த சில மாதங்களாக சொதப்பி வருவது தான். எப்போதும்  பேட்டிங்கில் பலம் வாய்ந்ததாக விளங்கும் இந்திய அணியில் தற்போது முன்னணி வீரர்கள்  தடுமாறி வருகின்றனர்.

ind-pak-dhoniகுறிப்பாக விராட் கோலி ரன் குவிக்க திணறி வருகிறார். முத்தரப்பு தொடர் மற்றும் பயிற்சி போட்டிகளில் அவர் எதிர்பார்த்தபடி விளையாடவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும்  அவர் அபாரமாக விளையாடுவார் என எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.

இதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடப்போகும் 11 வீரர்கள் யார், யார் என்பதை தேர்வு செய்வதிலேயே  டோனி பெரும் குழப்பத்தில் உள்ளார். மறுபுறம் பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் இந்தியாவை விட பலமாக  உள்ளது.

ஆனால் பாகிஸ்தான்  இங்கிலாந்தை எளிதாக வென்றதால் அவர்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. இருப்பினும் களத்தில்  இந்திய வீரர்கள்  உத்வேகத்துடன் விளையாடி சாதனையை தக்க வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் பட்டாசுடன் காத்திருக்கின்றனர்.

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோது ஆட்டம் நாளை இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. மலேசிய நேரப்படி காலை 10.00 மணிக்கு தொடங்குகிறது.