Home Featured உலகம் பாகிஸ்தான் பேருந்தில் குண்டுவெடிப்பு! 15 பேர் பலி! 50 பேர் படுகாயம்! (காணொளியுடன்)

பாகிஸ்தான் பேருந்தில் குண்டுவெடிப்பு! 15 பேர் பலி! 50 பேர் படுகாயம்! (காணொளியுடன்)

696
0
SHARE
Ad

pakபெஷாவர் – பாகிஸ்தானின் பெஷாவர் மாகாணத்தில் அரசு பேருந்தில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் பலியாகினர் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களும், காயமடைந்தவர்களும் அரசு தலைமைச் செயலக ஊழியர்கள் ஆவர்.

வடமேற்கு பாகிஸ்தானில் அரசு ஊழியர்களை குறிவைத்து பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த தினமான நேற்று அரசு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று தலைமைச் செயலகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

பேருந்தில் 50 அரசு ஊழியர்கள் பயணம் செய்தனர். பிரதான சாலையில் பேருந்து சென்ற போது திடீரென பேருந்து பெரும் சத்தத்துடன் வெடித்தது. இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி 15 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

#TamilSchoolmychoice

busblast-krxDஉயிரிழந்த 15 பேருந்து தலைமைச் செயலக ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இது அரசு ஊழியர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் பெஷாவர் மாகாணத்தில் போலீசார் மீது குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் 11 பேர் பலியாகினர் 17 பேர் படுகாயமடைந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தானை ஒட்டிய பழங்குடியின பகுதியில் பெஷாவர் மாகாணம் அமைந்துள்ளது. இங்கு பயங்கரவாதிகள் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

busblastபேருந்து குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் குறித்து கருத்து கூறியுள்ள போலீஸ் உயரதிகாரி முகம்மது காசிப், பஸ்சின் உள்ளே வெடி பொருட்களை மறைத்து வைத்து, வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.

படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடந்த போது பஸ்சில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

பேருந்து குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பேருந்து குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.