Home Featured இந்தியா ஏர்-இந்தியா விமானத்தின் சக்கரம் வெடித்து விபத்து – அதிர்ஷ்டவசமாக 150 பயணிகள் உயிர்தப்பினர்!

ஏர்-இந்தியா விமானத்தின் சக்கரம் வெடித்து விபத்து – அதிர்ஷ்டவசமாக 150 பயணிகள் உயிர்தப்பினர்!

869
0
SHARE
Ad

air indiaமும்பை – 150 பயணிகளுடன் மும்பை விமான நிலையத்தில் ஏர்-இந்தியா விமானம் தரையிறங்கிய போது சர்க்கரம் வெடித்தது. அதிர்ஷ்டவசமாக 150 பயணிகள் உயித்தப்பினர்.

மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து 150 பயணிகளுடன் ஏர் இந்தியாவின் A1-630 விமானம் நேற்று இரவு மும்பை விமான நிலையம் வந்தது. விமானம் விமானநிலையத்தில் தரையிறங்கி சென்றபோது, அதனது சர்க்கரம் வெடித்தது.

உடனடியாக பயணிகள் அவசர வாயில் வழியாக வெளியேற்றப்பட்டனர் என்று விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி வாயில் வழியாக வெளியேறிய போது சில பயணிகள் காயம் அடைந்தனர் என்றும் விமான நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

சர்க்கரம் வெடித்தவுடன், விமான நிலையத்தில் இருந்து ஓடுபாதைக்கு செல்லும் பாதை விமானம் கொண்டு செல்லப்பட்டது. பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். யாரும் காயம் அடையவில்லை என்று விமான நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் காரணமாக மும்பை விமான நிலையத்தின் முதன்மை ஓடுதளத்தில் விமானங்கள் இயக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.