Home Featured உலகம் ஏமனில் சவுதி அரேபியா கூட்டுப்படை தாக்குதல் – 75 பொதுமக்கள் பலி!

ஏமனில் சவுதி அரேபியா கூட்டுப்படை தாக்குதல் – 75 பொதுமக்கள் பலி!

650
0
SHARE
Ad

yemendead-supporters-3சனா – ஏமன் நாட்டில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் 75 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏமனில் ஹவுதி கிளைச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான அரபு கூட்டணி நாடுகள் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் உதவியுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

dead-supporters-3ஏமனின் வடக்கில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள, மக்கள் நடமாட்டமுள்ள மார்க்கெட் பகுதிகளில் இரண்டு வான்வெளி தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

#TamilSchoolmychoice

இந்த தாக்குதலில் சுமார் 75 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 50-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் வீடுகள், கடைகள் மற்றும் உணவு விடுதிகள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.