Home உலகம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் – ஈரான் – இணைந்து இஸ்ரேல் மீது டுரோன் தாக்குதல்!

ஏமன் கிளர்ச்சிப் படையினர் – ஈரான் – இணைந்து இஸ்ரேல் மீது டுரோன் தாக்குதல்!

428
0
SHARE
Ad

டெல் அவிவ் : எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று ஏமன் நாட்டின் கிளர்ச்சிப் படையினர் ஈரானுடன் இணைந்து, இஸ்ரேல் மீது டுரோன் என்னும் சிறுரக ஆளில்லா விமானங்களின் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

இஸ்ரேலும், அந்நாட்டுக்குத் துணையாக அமெரிக்கப் படையினரும் அந்த டுரோன்களை முறியடிக்கும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

டுரோன் தாக்குதல்களை முறியடிக்கும் முயற்சியில் இஸ்ரேலின் டெல் அவிவ், மேற்கு கரையோரம் (வெஸ்ட் பேங்க்) ஆகிய வட்டாரங்களில் வெடிச் சத்தங்கள் கேட்பதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெருசலம் முழுவதும் வெடிகுண்டுத் தாக்குதலைக் குறிக்கும் அபாய சங்கொலிகளும், அவசர சிகிச்சை வாகனங்களின் (ஆம்புலன்ஸ்) ஒலிகளும் கேட்பதாகவும் செய்திகள் குறிப்பிட்டன.

ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளின் தாக்குதல்களுக்கு எதிராக இஸ்ரேலை அமெரிக்கா பாதுகாக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருக்கிறார்.