
விஜயவாடா (ஆந்திரா) – ஆந்திரா மாநிலத்திற்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது நபர் ஒருவர் கல் வீசித் தாக்கியதால் அவருக்கு இடது கண் புருவம் அருகில் காயம் ஏற்பட்டது.
மருத்துவர்கள் உடனடியாக அவரைக் கவனித்து உரிய சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து அவரின் பிரச்சாரப் பயணமும் தொடர்ந்தது.
விஜயவாடா சட்டமன்ற உறுப்பினர் வேளம்பள்ளி ஸ்ரீநிவாஸ் மீதும் கல்வீசப்பட்டதில் காயம் அடைந்தார்.
ஆந்திரா மாநிலத்திற்கான நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் அந்த மாநிலத்தில் தேர்தல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.