Home உலகம் ஈரான் ஆதரவு ஹவுத்தி குழுவினருக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்

ஈரான் ஆதரவு ஹவுத்தி குழுவினருக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்

248
0
SHARE
Ad
பி2-ஸ்டெல்த் போர் விமானம் (கோப்புப் படம்)

டெஹ்ரான்: ஈரான் ஆதரவு ஹவுத்தி குழுவினருக்கு எதிராக நேற்று புதன்கிழமை (அக்டோபர் 16) மாலை அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியதாக பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார். பி-2 (B-2) ஸ்டெல்த் போர் விமானங்களைப் பயன்படுத்தி ஐந்து நிலத்தடி ஆயுத சேமிப்புக் கிடங்குகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இதன் மூலம் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், ஈரானுக்கு எதிராகவும் அமெரிக்காவும் நேரடித் தாக்குதல்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.

செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் இராணுவ மற்றும் பொதுப் போக்குவரத்துக் கப்பல்கள் மீது இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்த  பயன்படுத்தப்படுவதற்காக நவீன, பாரம்பரிய ஆயுதங்கள் இந்த வசதிகளில் சேமிக்கப்பட்டிருந்ததாக தாக்குதலுக்குப் பிறகு மூன்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

“நிலத்தடியில் எவ்வளவு ஆழமாக புதைக்கப்பட்டிருந்தாலும், பலப்படுத்தப்பட்டிருந்தாலும் அல்லது பாதுகாக்கப்பட்டிருந்தாலும், எங்கள் எதிரிகள் அணுக முடியாத வசதிகளை இலக்கு வைக்கும் அமெரிக்காவின் திறனின் தனித்துவமான வெளிப்பாடு இது” என்று ஆஸ்டின் ஓர் அறிக்கையில் கூறினார்.

ஹவுத்திகளுக்கு எதிராக ஏமனில் ஸ்டெல்த் குண்டு வீச்சு விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தியது இதுவே முதல் முறையாகும். பி-2 விமானங்கள் மற்ற விமானங்களைவிட அதிக எடை கொண்ட குண்டுகளை சுமக்கும் திறன் கொண்டவையாகும்.