Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : ‘கொண்டாடுவோம் செம்மையாகக் கொண்டாடுவோம்’ கருப்பொருளுடன் தீபாவளிக் கொண்டாட்டம்!

ஆஸ்ட்ரோ : ‘கொண்டாடுவோம் செம்மையாகக் கொண்டாடுவோம்’ கருப்பொருளுடன் தீபாவளிக் கொண்டாட்டம்!

243
0
SHARE
Ad

‘கொண்டாடுவோம் செம்மையாகக் கொண்டாடுவோம்’ என்ற உற்சாகமானக் கருப்பொருளுடன் இவ்வருடத் தீபாவளியை மிளிரச் செய்கிறது ஆஸ்ட்ரோ

*36 உள்ளூர் மற்றும் பன்னாட்டு முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள், பாப்-அப் அலைவரிசை RUSI (அலைவரிசை 210), அற்புதமானப் பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பு மற்றும் பலவற்றுடன் தீபாவளியின் சிறந்ததை அனுபவியுங்கள்

கோலாலம்பூர் – தீமையை அகற்றி நன்மையை மகிழ்ச்சியாகக் கொண்டாட எங்கள் வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தவும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை நினைவூட்டவும் கொண்டாடுவோம் செம்மையாகக் கொண்டாடுவோம் என்ற மனதை நெகிழச் செய்யும் கருப்பொருளுடன் இத்தீபாவளியை ஆஸ்ட்ரோ கொண்டாடுகிறது.

ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் புதிய மற்றும் அற்புதமான முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள், RUSI (அலைவரிசை 210) என்ற சிறப்புச் சமையல் பாப்-அப் அலைவரிசை ஆகியவற்றைக் கண்டு மகிழலாம்; உற்சாகமான ரொக்கப் பரிசுகளை வெல்லலாம்; பிரத்தியேகத் தீபாவளி பணப் பாக்கெட்டுகளைப் பெறலாம் மற்றும் புலனம் (வாட்ஸ் அப்) ஸ்டிக்கர்களைப் பதிவிறக்கம் செய்யலாம். அதுமட்டுமின்றி, அனைத்து மலேசியர்களும் ராகா வானொலியில் மேலும் பல தீபாவளி சிறப்புகளை எதிர்பார்ப்பதோடு பல்வேறு இடங்களில் நடைபெறும் ‘ஹலோ தீபாவளி’ நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளலாம்.

#TamilSchoolmychoice

ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “பிரத்தியேகமாகத் தொகுக்கப்பட்டப் பாப்-அப் அலைவரிசை முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டெலிமூவிகள், பல்வேறு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் சர்வதேசப் பிளாக்பஸ்டர் முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் வரைப் பல்வேறு வகையானப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் எங்கள் வாடிக்கையாளர்களின் தீபாவளி கொண்டாட்டத்தை மிளிரச் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உள்ளூர் உள்ளடக்கத்தை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து புதுமைகளை உருவாக்குவதோடு எங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பொருத்தமான நிகழ்ச்சிகளை ஒன்றிணைத்து வருகிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் குடும்பத்துடன் இந்த உன்னதமான நேரத்தில் இணையவும் அற்புதமான நினைவுகளை உருவாக்கவும் ஒரு வாய்ப்பை இந்தத் தீபாவளிக்கு நாங்கள் தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளின் அணிவகுப்பு வழங்கும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.

ஆஸ்ட்ரோவில் சுவாரசியமான உள்ளூர் மற்றும் பன்னாட்டு தீபாவளி முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள்

அக்டோபர் 21, 2024 முதல் நவம்பர் 3, 2024 வரை RUSI (அலைவரிசை 210) என்றச் சிறப்புச் சமையல் பாப்-அப் அலைவரிசையை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டுக் களிக்கலாம். இந்தத் தீபாவளிக்குப் புதிய உணவுகளைப் பரிசோதிக்க நமக்குள் இருக்கும் சமையல்காரர்களை ஊக்குவிக்கும் வண்ணம் சிறந்த உள்ளூர் மற்றும் சர்வதேசச் சமையல் நிகழ்ச்சிகளை இந்த அலைவரிசைச் சித்தறிக்கும்.

பல்வேறு நிகழ்ச்சித், தீபாவளி கொண்டாட்டம்; ரியாலிட்டி நிகழ்ச்சி, வா ராஜா வா; விளையாட்டு நிகழ்ச்சிகள், கதவைத் திற காசைப் பிடி மற்றும் பசங்க தீபாவளி; டெலிமூவிகள், படையப்பா ஊஞ்சல் மற்றும் நெக்லஸ்; உணவுப் பயண நிகழ்ச்சி, ரசிக்க ருசிக்க ரீலோடட் கலாட்டா தீபாவளி; சமையல் நிகழ்ச்சிச், செம்மையான சாப்பாடு – தீபாவளி ஸ்பெஷல் மற்றும் பல உள்ளூர் தமிழ் தீபாவளி முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளின் அணிவகுப்பை ஆஸ்ட்ரோ கொண்டிருக்கும்.

விருது நிகழ்ச்சிகள் JFW விருதுகள் 2024, பிளாக்ஷீப் குரல் விருதுகள் 2024, மற்றும் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2024; பிளாக்பஸ்டர் திரைப்படங்களானத், தங்கலான், ராயன், போட், டிமான்ட்டி காலனி 2, அந்தகன், இங்க நான் தான் கிங்கு, ரகு தாத்தா, லப்பர் பந்து, ஹிட்லர், சத்யபாமா, மற்றும் ஜெர்சி ஆகியச் சர்வதேச நிகழ்ச்சிகளின் விரிவான அணிவகுப்பை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

அடுத்தத் தலைமுறைத் திரைப்படத் திறமைசாளிகளை வளர்ப்பதற்கான எங்கள் முயற்சிகளில் ஒன்றாக எங்களின் உலகம் குறும்படப் போட்டி 2024-இலிருந்து 10 குறும்படங்களை நிகழ்ச்சிகளின் அணிவகுப்பில் சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

உலகம் குறும்படப் போட்டி 2024-இன் மாபெரும் வெற்றியாளராக ‘எம்.ஜி.ஆர் முறுக்கு கடை’ இயக்குநர் டுனேஸ்ராஜ் முனியாண்டி மகுடம் சூடினார்,  10,000 ரிங்கிட் வென்றதோடு ஆஸ்ட்ரோவிற்கான டெலிமூவி தயாரிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

(முதல் ஒளிபரப்பு காணும் நிகழ்ச்சிகளின் விரிவானத் தகவலுக்குப் பின் இணைப்பை அணுகவும்)

ஹலோ தீபாவளி நிகழ்வுகள்

தீபாவளி முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளில் இடம்பெறும் தங்களுக்குப் பிடித்த உள்ளூர் திறமையாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறவும், ஆஸ்ட்ரோவின் விரிவான உள்ளடக்கச் சலுகைகளின் விபரங்களைப் பெறவும் அனைத்து மலேசியர்களும் ஹலோ தீபாவளி நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள அழைக்கப்படுகிறார்கள். எங்களைப் பின்வரும் இடங்களில் சந்திக்கவும்:

கலர்ஸ் ஓப் இந்தியா: 5 & 6 அக்டோபர், கெ.எஸ்.எல் எஸ்பிளனேட் மால், கிள்ளான்

கலர்ஸ் ஓப் இந்தியா: 26 & 27 அக்டோபர், ஈப்போ மற்றும் ஜோகூர் பாரு

அஜெண்டா சூரியா: 26 & 27 அக்டோபர், புக்கிட் ஜாலீல்

வானொலி முன்னணியில், ஷமேஷன் மணி மாறன் இசையமைத்து, விகடகவி மகேன் எழுதி, விகடகவி மகேன், யாஷினி மற்றும் ராகா அறிவிப்பாளர்கள் பாடிய ராகா-வின் தீபாவளி விருந்து எனும் ராகாவின் தீபாவளிப் பாடலை மலேசியர்கள் ராகா வானொலி மற்றும் அதன் சமூகத் தளங்களில் கேட்டு மகிழலாம்.

ஆஸ்ட்ரோவின் புதிய வரையறுக்கப்பட்டக் காலச் சலுகையான JUALAN JIMAT BESAR -இல் இதுவரை இல்லாதக் குறைந்த விலையில் மாதத்திற்க்கு 41.99 ரிங்கிட் கட்டணத்துடன் இலவச நிறுவலுக்குப் பதிவுச் செய்யவும். ஒரே இடத்தில் சிறந்தப் பொழுதுபோக்கை அனுபவித்து மகிழுங்கள்! சந்தாதாரராக astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

*இதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலைகளும் வரியை உள்ளடக்கவில்லை. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

ஆஸ்ட்ரோவின் ‘கொண்டாடுவோம் செம்மையாகக் கொண்டாடுவோம்’ எனும் தீபாவளி பிரசாரத்தைப் பற்றிய மேல் விபரங்களுக்கு www.astroulagam.com.my/Semme Deepavali எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.