Home Featured கலையுலகம் சென்னையில் ஏப்ரல் 17-ஆம் தேதி நட்சத்திர கிரிக்கெட்! ரஜினி-கமல் பங்கேற்பு!

சென்னையில் ஏப்ரல் 17-ஆம் தேதி நட்சத்திர கிரிக்கெட்! ரஜினி-கமல் பங்கேற்பு!

621
0
SHARE
Ad

rajini-kamalசென்னை – தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் பணியில் அமர்ந்ததும், நடிகர் சங்கத்தின் நலனின் மீதும், உறுப்பினர்களின் நலனின் மீதும் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு இதுவரை கட்டிடம் எதுவும் அமைக்கப்படவில்லை. எனவே, நடிகர் சங்கத்துக்கென்று தனியாக புதிய கட்டிடம் ஒன்றை கட்ட சமீபத்தில் சென்னையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த கட்டிடம் கட்ட பல்வேறு வகைகளில் நிதி திரட்டவும் முடிவு செய்தனர். அதன்படி, முதற்கட்டமாக சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி, அதில் வரும் வருவாயை நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்தவும் ஒருமனதாக முடிவெடுத்தனர்.

#TamilSchoolmychoice

இதன் அடுத்தக்கட்ட முயற்சியாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் என்.சீனிவாசனை நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து இதுகுறித்து பேசியுள்ளனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் வருகிற ஏப்ரல் 17-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துவது என முடிவு செய்துள்ளனர். இந்த கிரிக்கெட் போட்டியில் ரஜினி, கமல் உள்ளிட்ட ஒட்டுமொத்த திரைத்துறையினரும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.