Home Featured நாடு பாஸ் – இக்காத்தான் இணைந்து ‘மூன்றாவது அணி’ உருவானது!

பாஸ் – இக்காத்தான் இணைந்து ‘மூன்றாவது அணி’ உருவானது!

623
0
SHARE
Ad

PAS - Ikatanகோலாலம்பூர் – பாஸ் கட்சியும், இக்காத்தான் ( Parti Ikatan Bangsa Malaysia) கட்சியும் இணைந்து புதிய எதிர்கட்சியாக உருவெடுத்திருப்பதோடு, அரசாங்கத்திற்கு ஆலோசனைகளும் கூறும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இன்று இரு கட்சிகளும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியது.

அச்சந்திப்பில் பேசிய பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங், இந்த புதிய கூட்டணி மக்களை மேம்படுத்துவதிலும், அரசியலமைப்பை நிலைநாட்டுவதிலும் முனைப்பாகச் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர் கூறுகையில், “அரசாங்கத்தை முற்றிலும் எதிர்க்கும் ஒரு எதிர்கட்சியாக இது செயல்படாது. மாறாக அரசாங்கத்திற்கு ஆலோசனைகளைக் கூறும் எதிர்கட்சியாகச் செயல்படும். அரசாங்கம் மக்களுக்கு நல்லது செய்தால் நிச்சயம் அதைப் பாராட்டுவோம்” என்று ஹாடி தெரிவித்துள்ளார்.

ஹாடி கூறியதை இகாத்தான் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் காதிர் சேக் பாட்சிரும் ஒப்புக் கொண்டுள்ளதோடு, இது எதையும் தீவிரமாக எதிர்க்கும் கட்சி அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.