Home கலை உலகம் “லிங்கா கிளைமேக்ஸ் பிடிக்கலைன்னா பாக்காதீங்க” – கே.எஸ் ரவிக்குமாரின் ‘பறக்காஸ்’ பேச்சு

“லிங்கா கிளைமேக்ஸ் பிடிக்கலைன்னா பாக்காதீங்க” – கே.எஸ் ரவிக்குமாரின் ‘பறக்காஸ்’ பேச்சு

585
0
SHARE
Ad

lingaaசென்னை, டிசம்பர் 19 – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான ‘லிங்கா’ படம் குறித்து ரஜினி ரசிகர்களிடையே நல்ல கருத்து நிலவினாலும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளால் இன்று உலக அளவில் பரவிக் கிடக்கும் நடுநிலை சினிமா விமர்சகர்கள் மத்தியில் அந்த அளவு வரவேற்பு பெறவில்லை என்பதே உண்மை.

‘லிங்கா’ வெளியான முதல் நாள் முதல் உலகின் பல்வேறு இணையத்தளங்களிலும், நட்பு ஊடகங்களிலும் அந்த படத்தின் முடிவில் வரும் பாராசூட் சண்டை குறித்து பெரும் நையாண்டிகள் செய்யப்பட்டு வந்தன.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக அப்படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறுகையில், ‘ஸ்பைடர் மேன்’ போன்ற படங்களில் கதாநாயகர்கள் பறந்து பறந்து சண்டை போடும் போது ரசிக்கிறீர்கள்? அதையே ரஜினி செய்தால் மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், அது போன்ற ஹாலிவுட் படங்களில் 1500 கோடிகளுக்கு மேல் செலவு செய்து படம் எடுக்கிறார்கள் என்றும், அதனால் தான் அக்காட்சிகள் மிகவும் தத்ரூபமாக வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

எல்லாவற்றையும் விட, ‘லிங்கா’ படம் வெளிவருவதற்காக அத்தனை நாட்கள் காத்திருந்து, எதிர்பார்த்து, டிக்கெட் எவ்வளவு விலையாக இருந்தாலும் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் படத்தை ஆர்வத்துடன் பார்த்து தனது கருத்துகளை தெரிவித்த ரசிகனுக்கு, கேஎஸ் ரவிக்குமார் கூறும் பதில் என்ன தெரியுமா?

“உனக்கு இஷ்டம் இல்லையா? பலூன் பைட்டுக்கு முன்னாடியே படம் முடிஞ்சிருச்சு எழுந்து கிளம்புன்றேன் நான்”- இது தான் ரவிக்குமாரின் பதில்.

கே.எஸ் ரவிக்குமாரின் பேச்சு காணொளி வடிவில்:-