கோலாலம்பூர், பிப்.27- சிலாங்கூர் மாநிலத்தை ஆளும் வாய்ப்பு தேசிய முன்னணிக்கு (தே.மு.) வழங்கப்பட்டால் புதியதோர் அரசாங்கத்தை உருவாக்க முடியும்.
இதன் மூலம் ஆற்றல் வாய்ந்த ஓர் அரசாங்கம் உருவாவதோடு மத்திய அரசாங்கத்திற்கு உறுதுணையாக விளங்கக்கூடிய வலுமிக்க அரசாங்கமும் உருவாகும் என்றார் பிரதமர்.
சிலாங்கூர் மாநிலத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் தே.மு. ஆட்சியின் கீழ் சுமூகமாகத் தீர்க்கப்படும் என்பதால் மாநிலத்தின் வளர்ச்சி சிறந்தோங்கும் என்றார். அவ்வாறு சிலாங்கூர் மாநிலத்தின் முன்னேற்றம் உறுதி செய்யப்பட்டால் மலேசியா துரித முன்னேற்றம் காணும்.
ஆகவே, மத்திய அரசாங்கத்தை ஒரு கட்சி ஆளுவதற்கும் சிலாங்கூர் மாநிலத்தை ஒரு கட்சி ஆளுவதற்கும் வழி வகுக்கக்கூடாது.
வெவ்வேறு கட்சி தலைமையிலான ஆட்சி என்பதால் பல்வேறு பிரச்சனைகள் தான் உருவாகும்.
பாண்டான் இண்டான் தேசியப் பள்ளியில் நேற்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில தே.மு. ஏற்பாட்டிலான சாப் கோ மே கொண்டாட்டத்தில் உரையாற்றிய போது பிரதமர் இவ்வாறு கருத்துரைத்தார்.