Home வணிகம்/தொழில் நுட்பம் கடன் இல்லாமல் வர்த்தகம் தொடங்கும் பயிலரங்கம்

கடன் இல்லாமல் வர்த்தகம் தொடங்கும் பயிலரங்கம்

707
0
SHARE
Ad

seminarபெட்டாலிங் ஜெயா, பிப்.27- எதிர்வரும் 2.3.2013 சனிக்கிழமையன்று ஏ7-ஏ8, பங்குனான் காஸ், ஜாலான் 8/1 ஏ, பெட்டாலிங் ஜெயா, சக்ரா அகாடமியில் காலை 10.00 மணிக்கு கடன் இல்லாமல்  வர்த்தகத்தைத் தொடங்குவது அல்லது விரிவுபடுத்துவது  எப்படி  எனும் தலைப்பில் இலவசப் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தகவல் யுகத்தில் எவ்விதக் கடனும் பெறாமல் ஒரு வியாபாரத்தைத் தொடங்குவதும் அதனை  விரிவுபடுத்துவதும்  மிகவும் சாத்தியமான ஒன்றுதான்.

தகவல் தொழில் நுட்பத்தை எப்படியெல்லாம் வர்த்தகங்களுக்காகப் பயன்படுத்த முடியும் என்பதை இந்த இலவச பயிலரங்கத்தில் கற்றுக் கொள்ளலாம்.

#TamilSchoolmychoice

இதில் மலேசியாவில் பதிவு பெற்ற அனைத்து இந்திய வர்த்தக உரிமையாளர்களும் கலந்து கொள்ளலாம்.

ஆர்வமுள்ள பொது மக்கள் 012-2167522, 0126846644 என்ற எண்களுக்கு தொடர்புக் கொள்ளலாம்.