பேரா மாநில அரசின் ஆதரவோடு, மாநில ம.இ.கா. மற்றும் பேரா மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சங்கமும் கூட்டாக இணைந்து சாதனை விழாவினை நடத்த மாநில முதல்வரின் ஆலோசகர் டத்தோ சு.வீரசிங்கம்( படம்) தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
மாநில முதல்வர் டத்தோஸ்ரீ டிராஜா டாக்டர் ஜம்ரி பின் அப்துல் காதிர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்க உள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு அரசாங்கத் தேர்வுகளில் குறிப்பாக யூ.பி.எஸ்.ஆர். 7 ஏ மற்றும் பி.எம்.ஆர் தேர்வில் 8ஏ பெற்ற மாணவர்களுக்குப் பரிசளித்து சிறப்பிக்கப்படும்.