Home இந்தியா பெங்களூர் குண்டுவெடிப்பு: உயிரிழந்த பெண் பவானியின் உடல் சென்னை சென்றது!

பெங்களூர் குண்டுவெடிப்பு: உயிரிழந்த பெண் பவானியின் உடல் சென்னை சென்றது!

600
0
SHARE
Ad

bhawani-blore-blastபெங்களூர், டிசம்பர் 30 – பெங்களூரு குண்டு வெடிப்பில் உயிரிழந்த பவானிதேவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை கொண்டு செல்லப்பட்டது.

குண்டு வெடிப்பில் பலியான சென்னையை சேர்ந்த பவானியின் உடல் நேற்று காலை விஜயமல்லையா மருத்துவமனையில் இருந்து விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு நான்கு மருத்துவர்கள் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

வெடிகுண்டில் வைத்திருந்த இரும்பு துண்டு பவானியின் பின்பக்க தலையில் பலமாக அடித்ததில், அவரது மூளை முழுமையாக சிதறியுள்ளது,

#TamilSchoolmychoice

அதன் காரணமாக அவர் மூளை பாதிப்பு அடைந்து கோமா நிலைக்கு சென்றதாகவும், ரத்தநாளம் செயல்படாமல் போனதில் உயிரிழந்ததாகவும் பிரேத பரிசோதனைனயில் தெரியவந்துள்ளது.

bangaloreபிரேத பரிசோதனை செய்தபிறகு அவரின் கணவர் பாலனிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.  பவானியின் உடலை பார்த்து கணவர் பாலன், மகன் பரத் உள்பட உறவினர்கள் கதறி அழுதனர். அந்த காட்சி காண்போர் மனதை உருக்கியது.

பிறகு வாகனம் மூலம் பிற்பகல் 3.15 மணிக்கு சென்னை கொண்டு செல்லப்பட்டது. தமிழகத்தில் இருந்து வந்திருந்த துணை போலீஸ் சூப்பிரெண்ட் தலைமையிலான போலீசார் மற்றும் கர்நாடக போலீசாரும் உடன் சென்றனர்.

பெங்களூரு குண்டு வெடிப்பு குறித்து தகவல் தந்தால் ரூ.10 லட்சம் பரிசு:

குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து விவரங்களை தெரிவிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.