Home உலகம் லங்காவி சென்ற ஏர் ஆசியா விமானம் பாதியில் திரும்பியதால் பரபரப்பு!

லங்காவி சென்ற ஏர் ஆசியா விமானம் பாதியில் திரும்பியதால் பரபரப்பு!

591
0
SHARE
Ad

HT_airasia_planeஜோர்ஜ்டவுன், டிசம்பர் 30 – நேற்று பினாங்கில் இருந்து லங்காவி நோக்கிச் சென்ற ஏர் ஆசியா விமானம் ஒன்று, புறப்பட்ட 10 நிமிடங்களில் நடுவானில் வட்டமடித்து மீண்டும் பினாங்கு திரும்பியது.

தொழில் நுட்பக் கோளாறுகள் காரணமாக அந்த விமானம் திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.
திங்கட்கிழமை மாலை சுமார் 4.30 மணியளவில் பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் மாலை 5.05 மணிக்கு லங்காவியைச் சென்றடைந்திருக்க வேண்டும்.

“எனினும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட 10 நிமிடங்களுக்கு எல்லாம் விமானம் திரும்பி வந்தது. இதையடுத்து தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் அந்த விமானம் மீண்டும் புறப்பட்டு, லங்காவியில் மாலை 6.30 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியது,” என்று பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ஏர் ஆசியா நிறுவன ஊழியர் ஒருவர், இதுகுறித்து விரைவில் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்றார்.