Home உலகம் ராஜபக்சேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் பிரச்சாரம்!

ராஜபக்சேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் பிரச்சாரம்!

529
0
SHARE
Ad

salmankhan-rajapakseகொழும்பு, டிசம்பர் 30 – இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் பிரச்சாரம் மேற்கொண்டார். இலங்கை அதிபர் தேர்தல் ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் தற்போதைய அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து மைத்திரிபால சிறிசேன என்பவரை பொது வேட்பாளராக களமிறக்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள தற்போதைய அதிபர் ராஜபக்சே நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

#TamilSchoolmychoice

தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்திலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ராஜபக்சே, நான் உங்களுடன் இருப்பேன், நான் உங்கள் பாதுகாவலன், உங்கள் தேவைகளை நிறைவேற்றி தருவேன், உங்கள் பிள்ளைகளுக்காக பல்கலைக்கழகம் அமைப்பேன், அதிகமான வீடுகள் கட்டி கொடுப்பேன் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக, இந்திய பாலிவுட் நடிகர் சல்மான்கான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இலங்கையிலுள்ள பொரளை பகுதியில் இன்று ராஜபக்சே கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது.

இதில், நடிகர் சல்மான்கானும், நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸும் கலந்து கொண்டு, ராஜபக்சேவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். இதற்கிடையே, ராஜபக்சேவின் மகன் நமலும், இந்திய பாலிவுட் நடிகர் சல்மான்கானும் நண்பர்கள் எனவும், நமலின் அழைப்பின் பேரில் சல்மான்கான் அங்கு சென்று ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேபோல், நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் இலங்கையில் பிறந்து அங்கே வளர்ந்தவர். மேலும், முன்னாள் இலங்கை அழகியாக ஜாக்குலின் இருந்துள்ளார். இதையடுத்து அவரும் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை அதிபர் தேர்தலில் பாலிவுட் நடிகர்கள் பிரச்சாரம் மேற்கொண்டது இதுவே முதல் முறையாகும். ராஜபக்சேவுக்கு ஆதரவாக சல்மான்கான் பிரச்சாரம் மேற்கொண்டது தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.