கிரீஸ், டிசம்பர் 30 – கடந்த ஞாயிற்றுக்கிழமை கிரீஸ் நாட்டிலிருந்து இத்தாலி நோக்கிச் சென்று கொண்டிருந்த நோர்மன் அட்லாண்டிக் பயணிகள் படகு நடுக்கடலில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து இதுவரை அந்த விபத்தில் 10 பேர் மரணமடைந்துள்ளனர்.

படகிலிருந்த மற்ற பயணிகள் 378 பேரும் ஹெலிகாப்டர் மற்றும் அருகிலிருந்த சரக்குக் கப்பல்களின் துணை கொண்டு காப்பாற்றப்பட்டு விட்டனர்.
நோர்மன் அட்லாண்டிக் பயணிகள் படகிலிருந்து காப்பாற்றப்பட்ட பயணிகளில் சிலர்..
படங்கள்: EPA