Home உலகம் நடுவானில் பழுதான விமானம்: 447 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானி!

நடுவானில் பழுதான விமானம்: 447 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானி!

593
0
SHARE
Ad

virgin-atlantic354கேட்விக், டிசம்பர் 31 – ஏர் ஏசியா விமான விபத்தின் தாக்கம் அடங்குவதற்குள்ளாக இன்று லண்டன் கேட்விக் விமான நிலையத்திலிருந்து 447 பயணிகளுடன் லாஸ் வேகாஸ் நகருக்குப் புறப்பட்ட போயிங் 747 ரக ஜம்போ வி.எஸ் 43 விமானம் அதிர்ஷடவசமாக பெரும் விபத்திலிருந்து தப்பியுள்ளது.

விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்தைச் சேர்ந்த இந்த விமானம் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 11.44 மணிக்கு அமெரிக்காவின் லாஸ் வேகாசுக்குப் புறப்பட்டது. இந்நிலையில், 12.15 மணிக்கு அதன் இறங்கும் கியர் (லேண்டிங் கியர்) பழுதானது விமானிக்கு தெரிய வந்தது.

virgin_plane_003உடனடியாக விமானி விமானக் கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்து விட்டு, 1.45 மணிக்கு டெக்ஸ்ட் புக் லேண்டிங் எனப்படும் அவசர லேண்டிங் செய்ய இருப்பதாகவும் பயணிகளிடம் விளக்கமாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

இதைக் கேட்டு பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். சிலர் தாம் இறந்து விடுவோம் என்ற பயத்தில் கதறி அழுதனர். பின்னர் விமானி அங்குள்ள கடற்பகுதியைச் சுற்றி வந்து விமானத்தின் எரிபொருளை காலி செய்தார்.

இதன் மூலம் விமானத்தின் எடை குறைந்தது. பின்னர் தான் புறப்பட்ட விமான நிலையத்திற்கு விமானத்தைத் திருப்பியுள்ளார். அங்கும் விமானத்தின் உயரத்தையும், வேகத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்த பின்னர் ஓடுதளத்தை நெருங்கியுள்ளார்.

virgin_plane_006மொத்தம் உள்ள 4 இறங்கும் கியர்களில் (லேண்டிங் கியர்களில்) ஒரு கியர் வெளிவராத நிலையில், விமானம் ஓடுதளத்தில் பாய்ந்தது. தரையைத் தொட்டவுடன் விமானத்தில் பலத்த அதிர்வு ஏற்பட்டது.

இருந்தும் விமானியின் சாமர்த்தியத்தால் சில நிமிடங்களில் சரிந்தபடியே பலத்த சத்தத்துடன் விமானம் சரியாக ஓடுதளத்தில் இறங்கியது. அடுத்த நொடி பயணிகள் அனைவரும் தங்களை மறந்து கைதட்டினர்.

உணர்ச்சிப் பெருக்கில் அழுதபடி தங்கள் உயிரைக் காப்பாற்றிய விமானியை பாராட்டினர். நெருக்கடியான நேரத்தில் நிதானமாக செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானிக்கு உலகம் முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

virgin_plane_007ஆனால், அந்த விமானியோ, “பயணிகள் அமைதியாக இருந்து ஒத்துழைப்பு கொடுத்ததால் தான் எங்களால் நிதானமாக செயல்பட முடிந்தது” என்று கூறியுள்ளார். தரை இறங்கிய உடன் அங்கு வந்த மீட்புப் படையினர் விமானிகள் மற்றும் பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர்.

விமான நிலையத்தை அடைந்த பயணிகள் தங்களின் திகிலான அனுபவங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர். விமானப் பயணிகளுக்கு இந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே அமைந்திருக்கிறது. அடுத்தடுத்து விமானங்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.