Home தொழில் நுட்பம் டைசெனை முன்னிலைப்படுத்த அண்டிரொய்டை தவிர்க்கும் சாம்சுங்!

டைசெனை முன்னிலைப்படுத்த அண்டிரொய்டை தவிர்க்கும் சாம்சுங்!

587
0
SHARE
Ad

Android-vs-Tizenகோலாலம்பூர், ஜனவரி 3 – 2015-ல் தங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் திறன் தொலைகாட்சிகள் அனைத்தும் ‘டைசென்’ (Tizen) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்கும் என சாம்சுங் அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப கருவிகளை பொறுத்த வரை நாம் பெரும்பாலும் விரும்புவது, ஒரு கருவி ஒன்றிற்கு மேற்பட்ட வேலைகளை செய்ய வேண்டும் என்பதாகும்.

உதாரணமாக ஒரு தொலைக்காட்சியை நம்மால் தொலைக்காட்சியாகவும், கணினியாகவும் பயன்படுத்த முடியும் என்றால், நம் ஒரே விருப்பம் அந்த கருவியை வாங்க வேண்டும் என்பதாக மட்டுமே இருக்கும்.

#TamilSchoolmychoice

வாடிக்கையாளர்களின் அடிப்படை மன நிலையை புரிந்து வைத்துள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், சமீப காலமாக அத்தைகைய கருவிகளை உருவாக்கி வருகின்றன. குறிப்பாக சாம்சுங் அதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.

சாம்சுங் புதிதாக அறிமுகப்படுத்த இருக்கும் திறன் தொலைக்காட்சிகளை நாம் தொலைக்காட்சியின் பயன்பாட்டிற்காகவும், கணினியைப் போன்று இணையத் தேடல்களுக்கும் பயன்படுத்த முடியும்.

tizen-130806இதுநாள் வரை அத்தகைய தொலைக்காட்சிகளை அண்டிரொய்டில் உருவாக்கி வந்த சாம்சுங், இனி அதனை டைசென் இயங்குதளத்தில் உருவாக்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சாம்சுங் நிறுவனத்தின் விசுவல் டிஸ்பிளே பிரிவின் தலைவர் கிம் ஹ்யூன்-சுக் கூறுகையில், “டைசென் இயங்குதளத்தில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம்.

விரைவில், எங்கள் நிறுவனத்தின் இயங்குதளத்தை அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்துவர்” என்று அவர் கூறியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் அண்டிரொய்டு இயங்குதளத்திற்கு போட்டியாக சாம்சுங் டைசெனை முன்னகர்த்தி செல்கிறது.

எனினும், ஆப்பிள் மற்றும் கூகுள் தங்கள் இயங்குதளங்களை பல வருடங்களாக சிறப்பானவையாக மேம்படுத்தி உள்ளன. அதனால் சாம்சுங் தனது இயங்குதளத்தை வெற்றி பெறச் செய்ய நீண்ட காலமாகலாம்.