Home வாழ் நலம் முத்தம் கொடுத்தால் ஆயுள் அதிகரிக்கும்!

முத்தம் கொடுத்தால் ஆயுள் அதிகரிக்கும்!

1415
0
SHARE
Ad

children-kissing-picturesஜனவரி 5 – முத்தம் போராட்ட களத்திற்குரியதல்ல, அது அன்பின் வெளிப்பாடு. பிறக்கும் குழந்தைக்கு தாய் கொடுக்கும் அன்பு முத்தத்தில்தான் அதன் ஜென்மம் தொடங்குகிறது.

அன்பான மனைவி கொடுக்கும் கண்ணீர் கலந்த கடைசி முத்தத்தில்தான் ஒரு ஆணின் வாழ்க்கை நிறைவடைகிறது.  தாய் தனது குழந்தைக்கு கொடுத்த முதல் முத்தம் அவளுக்கு நினைவிலே இருப்பதால்தான்,

குழந்தை வளர்ந்து பாட்டி ஆனாலும் தாய் அவளை குழந்தையாகவே பார்க்கிறாள். முதல் முத்தம் கொடுத்த அந்த முகமே நினைவில் நிற்பதால் தன் பிள்ளை செய்யும் அத்தனை தொந்தரவுகளையும் ஏற்றுக்கொள்கிறாள் தாய்.

#TamilSchoolmychoice

Kids-kissing (1)முத்தம் அன்பை அதிகரிப்பதோடு வலியை குறைக்கும். மனஅழுத்தத்தை மாற்றும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரும். இன்னும் பல வேடிக்கை வினோதங்களையும் செய்யும்.

அமைதி இருந்தால் ஆரோக்கியம் கிடைக்கும். ஆரோக்கியம் கிடைத்தால் ஆயுள் அதிகரிக்கும்’ ஆகையால் முத்தல் கொடுத்தால் ஆரோக்கியமும் ஆயுளும் அதிகரிக்கும் என அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்தனர்.