Home நாடு மறுதேர்தலை நடத்த பழனிவேல் அனுமதி தேவையில்லை: சரவணன்

மறுதேர்தலை நடத்த பழனிவேல் அனுமதி தேவையில்லை: சரவணன்

487
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 6 – தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலின் அனுமதியின்றியே கூட மஇகாவில் மறு தேர்தலை நடத்த முடியும் என கட்சியின் உதவித் தலைவரும் துணையமைச்சருமான டத்தோ சரவணன் தெரிவித்துள்ளார். அவரது இக்கருத்து மஇகா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

m.saravanan1-may7
டத்தோ எம்.சரவணன்

முன்பே அறிவித்திருந்தபடி நேற்று திங்கட்கிழமை காலை சங்கப் பதிவிலாகா அதிகாரிகளை சந்தித்துப் பேசினார் சரவணன்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறுதேர்தலை நடத்த கட்சித் தலைவர் பழனிவேலின் அனுமதி தேவைப்படவில்லை என்றார். மாறாக 15 மத்திய செயலவை உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டு மறுதேர்தலை நடத்த முடியும் என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“மறுதேர்தலை நடத்துவதற்கு என சிறப்புக் குழு ஒன்றை அமைக்குமாறு சங்கப் பதிவிலாகா அறிவுறுத்தி உள்ளது. இதை ஏற்று சிறப்புக் குழு ஒன்றை அமைப்பது குறித்து தலைவரிடம் வேண்டுகோள் விடுப்பேன். கட்சி நலனைக் கருதியாவது அவரைச் சந்திக்க வேண்டியுள்ளது. அவரது அலுவலகத்தில் அவரை சந்திக்கும் வாய்ப்பு அமையாவிட்டால் வேறு வழியின்றி அவரது வீட்டிற்கு வெளியே காத்திருக்க வேண்டியதுதான். அவரைச் சந்திக்க இரண்டொரு நாட்களானாலும் பரவாயில்லை. அப்படியும் சந்திக்க மறுத்தால், கட்சி சட்டவிதிகளின்படி 40 தொகுதித் தலைவர்களை வைத்து சிறப்புக் பொதுப் பேரவை ஒன்றை நடத்த நேரிடும்,” என்றார் சரவணன்.

தற்போதைய சூழ்நிலையில், மஇகாவின் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 23 மத்திய செயலவை உறுப்பினர்களின் தேர்வு செல்லுபடியாகாது என்றார்.

“தலைமைச் செயலாளர் உட்பட எந்தப் பொறுப்புக்கும் யாரையும் நியமிக்க இயலாது. அப்படிப்பட்ட நியமனங்களும் செல்லுபடியாகாது. தற்போதைய நிலையில் தேசியத் தலைவர் மற்றும் துணைத் தலைவரின் தேர்வு மட்டுமே செல்லுபடியாகும்,” என்று சரவணன் மேலும் கூறியுள்ளார்.