Home இந்தியா தமிழக முதல்வர், அமைச்சர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழக முதல்வர், அமைச்சர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

452
0
SHARE
Ad

Tamilnaaduஅரியலூர், ஜனவரி 6 –  தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அரியலூர் ரயில் நிலையத்திற்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூர் ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம்  2 மணியளவில் ஒரு தபால் வந்தது.

கடிதத்தை ரயில் நிலைய அலுவலக ஊழியர்கள் பிரித்து பார்த்தனர்.  அதில், வரும் 13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதிக்குள் அரியலூர் ரயில் தடத்தில் மருதையாற்று பாலத்தில் மலைக்கோட்டை ரயில் இரவில் வரும்போது வெடிகுண்டு வெடிக்கும்.

தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் செல்லும் போதும் மற்றும் அமைச்சர்கள் செல்லும் போதும் வெடிக்கும். இதில் மாற்றமில்லை. மேலும் முதல்வர் கோட்டைக்கு செல்லும் போதும் குண்டு வெடிக்கும். இப்படிக்கு மோகன், முரளி, சுரேஷ், ராமலிங்க நகர், புத்தூர், திருச்சி என எழுதப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

இந்த கடிதம் கடந்த 31-ஆம் தேதி எழுதப்பட்டுள்ளது. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் எஸ்.பி. அலுவலகத்தில் தகவல் தெரிவித்தனர்.  இது தொடர்பாக அரியலூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் ரயில் நிலையத்துக்கு வந்த மிரட்டல் கடிதத்தில் இருந்த அதே முகவரியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் 29-11-14-க்குள் ஸ்ரீரங்கம் கோயிலில் குண்டு வெடிக்கும் என்று எழுதப்பட்டிருந்தது.

ஒரே முகவரியில் இருந்து அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் வருவது போலீசாருக்கே சவால் விடும் வகையில் உள்ளது.