Home இந்தியா தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இந்தி மொழியைப் பயில கட்டாயம் இல்லை!- மத்திய அரசு

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இந்தி மொழியைப் பயில கட்டாயம் இல்லை!- மத்திய அரசு

769
0
SHARE
Ad

சென்னை: தமிழக பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக ஹிந்தியை கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும் என்ற சொல் நீக்கப்பட்டு புதிய திருத்தப்பட்ட வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டிருந்தது. அந்த வரைவு அறிக்கையில், இந்தி பேசாத மாநிலங்களில் மாநில மொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை கட்டாயம் கற்க வேண்டும். அதற்கு அடுத்தப்படியாக மூன்றாவது மொழியாக இந்தியை கற்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

#TamilSchoolmychoice

ஆனால், இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பலைகள் எழுந்தன. இந்நிலையில், திருத்தப்பட்ட புதிய வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சு போது வெளியிட்டுள்ளது

இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய வரைவு அறிக்கையில், இந்தி பேசாத மாநிலங்களில் மாநில மொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து மூன்றாவது மொழியை கட்டாயம் கற்க வேண்டும். ஆனால், மூன்றாவது மொழி இந்தியாகத் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மூன்றாவது மொழியை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.