Home Video ராட்சசி: மீண்டும் முக்கியப் பாத்திரத்தில் ஜோதிகா!

ராட்சசி: மீண்டும் முக்கியப் பாத்திரத்தில் ஜோதிகா!

1002
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம்ராட்சசி”. இந்த படத்தில் ஜோதிகா நாயகியாக நடித்திருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு பெண்ணிய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா இந்த படத்திலும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது, இப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகி இரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

அரசு பள்ளி ஒன்றின் ஆசிரியராக நடிக்கும் ஜோதிகா, அலச்சியமாக இயக்கும் அந்த பள்ளியை வலுவாக கட்டமைக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அங்கு அவர் எதிர்கொள்கிற பிரச்சனைகளுடன் விறுவிறுப்பாக நகர்கிறது முன்னோட்டக் காணொளி.

#TamilSchoolmychoice

அரசு பள்ளியில் படிப்பவர்கள் உயர் கல்வியில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுத்தால்  வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் நலம் பெறுவார்கள் ஆனால் அரசு யாருடைய வறுமையை ஒழிக்கிறது என்ற தெரியவில்லை என்கிற வசனங்கள் இந்த முன்னோட்டக் காணொளியில் கவனம் பெறுகிறது.

சியான் ரோல்டன் இசை அமைக்கும் இப்படத்திற்கு யுகபாரதி, தனிக்கொடி பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். விரைவில் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: