காந்திநகர், ஜனவரி 8 – உலகம் முழுவதும் உள்ள இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் ‘பிரவாசி பாரதிய திவாஸ்’ மாநாடு நேற்று புதன்கிழமை குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகரில் தொடங்கப்பட்டது.
இம்மாநாட்டை தென் ஆப்பிரிக்க அமைச்சர் பூட்டாநீஸ், அதிபர் டொனால்ட் ஆர், பிரதமர் மோடி மற்றும் சுஸ்மா சுவராஜ் விளக்கேற்றி 13-வது ‘பிரவசி பாரதிய திவாஸ்’ மாநாட்டை துவக்கிவைத்தனர்.இதற்கு முன் ‘பிரவாசி பாரதிய திவாஸ்’ இளைஞர் பிரிவு மாநாட்டை இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் நேற்று புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக துவக்கிவைத்து உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டை குத்துவிளக்கேற்றி உரையாற்றிய சுஸ்மா சுவராஜ், ” இளைஞர்கள் மிக முக்கியமான பங்கினை ஆற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்” என்றார்.
இந்தியாவுக்கு வெளியே 2-கோடியே 50 இலட்சம் இந்திய வம்சாவளியினர் வாழ்கின்றனர். அவர்களை ஒன்றிணைப்பதற்கு இந்த மாநாடு துணை புரிகிறது எனவுன் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இன்று இந்திய பிரதமர் மோடி குஜராத் காந்திநகரில் ‘பிரவாசி மாநாட்டில்’ பங்கேற்று காந்திநகரில் புதிதாக கட்டப்பட்ட மகாத்மா காந்தி அர்ப்பணிக்கப்பட்ட உப்புமலை வளாகத்தை திறந்துவைத்து உரையாற்றினார்.
மேலும், ’13 பிரவாசி பாரதிய திவாஸ்’ மாநாட்டின் காந்தியின் வாழ்க்கை தொடர்பான கருத்துக்களை பார்வையாளர்கள் புத்தகத்தில் எழுதினார் மோடி.