Home Slider ஆசியான்-இந்தியா மையம் நிறுவப்பட்டது

ஆசியான்-இந்தியா மையம் நிறுவப்பட்டது

1357
0
SHARE
Ad

புதுடெல்லி, டிச 20 – ஆசியான் நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசியான் நாடுகள் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வர்த்தக உறவுகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மையம் புது டில்லியில் இருந்து செயல்படும். இதே போன்றதொரு ஆசியான்-ஜப்பான் மையம் தோக்கியோவில் செயல்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த மையம் செயல்படத் தொடங்கியதும் ஆசியான்-இந்தியாவுக்கு இடையிலான வர்த்தகங்களும் உறவுகளும் மேம்படும் என்பதோடு ஏறத்தாழ 1.8 பில்லியன் மக்கள் தொகை கொண்ட வர்த்தக சந்தையையும் அது உள்ளடக்கியிருக்கும். 3 டிரில்லியன் அமெரிக்க வெள்ளியைக் கொண்ட வர்த்தக சாம்ராஜ்யம் உருவாகவும் இது வழிவகுக்கும்.