Home கலை உலகம் என்.டி.ராமாராவ் வாழ்ந்த வீடு இடிப்பு : பிரமாண்ட வணிக வளாகமாகிறது

என்.டி.ராமாராவ் வாழ்ந்த வீடு இடிப்பு : பிரமாண்ட வணிக வளாகமாகிறது

987
0
SHARE
Ad

Ramaraoநகரி,டிசம்பர் 20 – ஆந்திர சினிமாவிலும், அரசியலிலும் சகாப்தம் படைத்த என்.டி.ராமாராவ், வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டு, அங்கு பிரம்மாண்ட வணிக வளாகம் கட்டப்படுகிறது.

என்.டி.ராமராவுக்கு 11 பிள்ளைகள். இதில் 2 பேர் காலமாகிவிட்டனர். எஞ்சி இருக்கும் 9 பிள்ளைகளுக்கு என்.டி.ராமராவ் உயிருடன் இருக்கும்போதே சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து கொடுக்கப்பட்டது.

இதில் ஐதராபாத்தில் உள்ள வீடு அவரது மகன் ராமகிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டது. அதனை அவர் தெலுங்கு தேச பிரமுகருக்கு விற்றுவிட்டார். வீட்டை வாங்கியவர் அதனை இடித்து பிரமாண்ட வணிக வளாகம் கட்டி உள்ளார்.

#TamilSchoolmychoice

பஞ்சாரஹில்ஸ் வீடு இளைய மகள் உமா மகேஸ்வரி பெயரில் உள்ளது. இந்த வீட்டில் தான் என்.டி.ராமராவ், தனது இரண்டாவது மனைவி சிவபார்வதியுடன் இறுதி காலம் வரை வாழ்ந்தார். அவருடைய மறைவுக்கு பிறகு சிவபார்வதி அந்த வீட்டில் வசித்து வந்தார். என்.டி.ராமராவ் பயன்படுத்திய பொருட்களை அவர் நினைவு சின்னங்களாக பாதுகாத்து வந்தார்.

இந்த நிலையில் அந்த வீட்டுக்கு உரிமை கோரி அமெரிக்காவில் வசிக்கும் என்.டி.ராமராவ் இளைய மகள் உமாமகேஸ்வரி ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து அங்கு வசித்து வந்த சிவபார்வதி வெளியேற்றப்பட்டார்.

இப்போது அந்த வீடும் இடிக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்படுகிறது.

என்.டி.ராமராவ் வசித்த வீடு இடிக்கப்படுவதை பார்த்து அவரது மனைவி சிவபார்வதி கண்ணீர் வடித்தார். மேலும் என்.டி.ராமராவ் வாரிசுகளுக்கு கண்டனம் தெரிவித்து பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்துள்ள அவர், “என்.டி.ராமராவ் தான் சம்பாதித்து வாங்கிய சொத்துக்களை பிள்ளைகளுக்கு சமமாக பிரித்து கொடுத்து உள்ளார். அவரது சினிமா வாரிசு, அரசியல் வாரிசு என்று சொல்லிக் கொண்டு குடும்ப உறுப்பினர்கள் தங்களை வளர்த்துக் கொண்டார்கள் என்.டி.ராமராவ் பெயரை சொல்லி வளர்ந்தவர்கள் இன்று அவரது நினைவு சின்னங்களை அழித்து வருகிறார்கள்.”

“பணத்துக்காக அவர் வாழ்ந்து மறைந்த வீட்டை இடிக்கிறார்கள். பணம்தான் முக்கியம் என்று அறிவித்து இருந்தால் லட்சோப லட்ச ரசிகர்கள் தங்கள் பணத்தை கொடுத்து இந்த வீட்டை வாங்கி நினைவு சின்னம் ஆக்கியிருப்பார்கள். 9 குழந்தைகள் பெற்றும் ஒருவர் கூட அவரது புகழை வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வழி செய்யவில்லை. அவரது நினைவுகளை அழித்து வருகிறார்கள்.” என்று கூறியுள்ளார்.