பழனியில் பத்திரிகையாளர்களிடம் பாரதிராஜா பேசுகையில், “நான் இயக்கி வரும் ‘அன்னக்கொடியும் கொடி வீரனும்ய படம் விரைவில் முடிந்துவிடும். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளேன். படத்தின் தொடக்க விழாவுக்கு கோடம்பாக்கத்தை அல்லி நகரத்துக்கு அழைத்து வந்ததுபோல, இசை வெளியீட்டு விழாவுக்கு மதுரைக்கு கோடம்பாக்கத்தை அழைத்து வருவேன்.
விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். மூலம் ஒளிபரப்ப கமல் எடுத்து வரும் முயற்சியை வரவேற்கிறேன். அவர் ரூட்டில் நானும் போகத் தயாராகிறேன். புதிய தொழில் நுட்பங்களுக்கு நாம் எப்போதும் வரவேற்பு அளிக்க வேண்டும், வரும் காலங்களில் எனது படங்களையும் இதுபோல் வெளியிட முயற்சி மேற்கொள்வேன்.” என்று கூறினார்.