Home Slider கர்நாடகப் பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் கணவர் கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை

கர்நாடகப் பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் கணவர் கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை

1133
0
SHARE
Ad

Nithyasreeசென்னை,டிசம்பர் 20 – பிரபல கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் கணவர் சென்னை, கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். கணவருடைய தற்கொலை செய்தியை கேட்ட நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

பிரபல பின்னணிப் பாடகி டி.கே.பட்டம்மாளின் பேத்தியான நித்யஸ்ரீ மகாதேவன், கர்நாடக இசை உலகில் பிரபலமாக விளங்கும் பாடகியாவார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், “கண்ணோடு காண்பதெல்லாம்…” என்ற பாடலைப் பாடி திரையுலகில் பாடகியாக அறிமுகமான இவர், அந்த ஒரு பாடலிலேயே பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானார்.

இவரது கணவர் மகாதேவன் இன்று (வியாக்கிழமை) காலையில் சென்னை, கோட்டூர் பாலத்தில் காரில் வந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறியுள்ளனர்.

#TamilSchoolmychoice

இன்று காலை மகாதேவன், ஒரு சொகுசுக் காரில் கோட்டூர்புரம் வந்ததாகவும், அங்கு பாலத்தில் வண்டியை நிறுத்திவிட்டு கூவம் ஆற்றில் குதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்த மக்கள் உடனே போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புப் படையினருடன் விரைந்து வந்த போலிசார் நீண்ட நேரம் முயற்சிக்குப் பின்னர் இறந்த உடலே சிக்கியது. அவரது உடலை சோதனை செய்ததில் அவர் பின்னணிப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் என்பது தெரியவந்தது.

இதற்கிடையே கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேள்விப்பட்ட உடன் நித்யஸ்ரீயும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரை உறவினர்கள் காப்பாற்றி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மகாதேவனின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. கர்நாடக இசை உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இச்சம்பவத்தால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.