Home இந்தியா தமிழ் எழுத்தாளர் டி.செல்வராஜின் ‘தோல்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

தமிழ் எழுத்தாளர் டி.செல்வராஜின் ‘தோல்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

1588
0
SHARE
Ad

டெல்லி,டிச.21 – தமிழ் எழுத்தாளர் டி.செல்வராஜின் ‘தோல்’ நாவலுக்கு சாகித்ய அகாடம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்களையும், எழுத்தாக்கத்தையும் கெளரவப்படுத்தும் வகையில் மத்திய அரசு ஆண்டு தோறும் சிறந்த இலக்கியங்களைத் தேர்வு செய்து சாகித்ய அகாடமி விருது வழங்கி வருகிறது. 24 மொழிகளில் வெளியான படைப்புகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த் ஆண்டுக்கான விருது பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கே.சச்சிதானந்தம் (மலையாளம்-மாரன்னு வச்ச வழிகள்), லேட் பாலகிருஷ்ணா பாவ்ரா (டோக்ரி-டிம் டிம் கார்தே தாரே), மக்கான் லால் கான்வால் (காஷ்மீரி-யாத் அரங்காஸ் மான்ஸ்) ஆகியோர் அடங்குவர்.

12 கவிதை புத்தகங்கள் தவிர, 6 சிறுகதை தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு சுய சரிதை மற்றும் ஒரு திறனாய்வு நூலுக்கு இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படும் என்று அகாடமி அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

புக்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நாவலாசிரியர் தாயிலின் ஆங்கிலக் கவிதைத் தொகுப்பிற்கும் (தீஸ் எரர்ஸ் ஆர் கரெக்ட்), பிரபல வங்காள மொழி எழுத்தாளர் முகோபாத்யாயாவின் பிரசன் என்ற நாவலுக்கும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. தமிழில் முற்போக்கு எழுத்தாளர் டி.செல்வராஜ் எழுதிய தோல் என்ற நாவல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 2008 முதல் டிசம்பர் 2010 வரை வெளியிடப்பட்ட படைப்புகளில் சிறந்த படைப்புகள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த விருது பெறுவோருக்கு பரிசுத்தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். மேலும் செப்பு பட்டயம் மற்றும் சால்வை ஆகியவையும் வழங்கி கெளரவிக்கப்படும்.