Home One Line P2 ‘சூல்’ நாவலுக்காக எழுத்தாளர் சோ.தருமனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது!

‘சூல்’ நாவலுக்காக எழுத்தாளர் சோ.தருமனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது!

885
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியைப் பற்றிய சசி தரூரின் புனைவு அல்லாத நூல் உட்பட 23 மொழிப் படைப்புகளுக்காக 2019-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருது கடந்த புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

இது சம்பந்தமான ஓர் அறிக்கையில், அகாடமி கவிதை புத்தகங்கள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் சுயசரிதை என பல்வேறு பிரிவுகளில் ஆங்கிலம், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படைப்புகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதியன்று நடைபெறும் விழாவில் ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என்று அகாடமி தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதனிடையே, இந்த ஆண்டு நாவல் பிரிவில் தமிழ் எழுத்தாளர் சோ.தர்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘சூல்’ எனும் நாவலுக்கு அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இதனிடையே, ஆங்கிலப்பிரிவில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் எழுதிய ‘ஆன் எரா ஆப் டார்க்னெஸ்’ என்ற நூல் புனைவு அல்லாத பிரிவில் விருது பெறுகிறது.