Home இந்தியா எஸ்.இராமகிருஷ்ணனுக்கு சாகித்திய அகாடமி விருது

எஸ்.இராமகிருஷ்ணனுக்கு சாகித்திய அகாடமி விருது

1334
0
SHARE
Ad
எஸ்.இராமகிருஷ்ணன்

சென்னை – தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனுக்கு 2018-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

எஸ்.ரா. எனப் பரவலாக அறியப்படும் இராமகிருஷ்ணன் கட்டுரைகள், பயணப் பதிவுகள், சிறுகதைகள், நாவல்கள் பல முனைகளிலும் நீண்டகாலமாக எழுதி, தனக்கென ஒரு மிகப் பெரிய வாசகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர்.

மலேசியாவுக்கும் பலமுறை வருகை தந்து, இலக்கிய உரைகள் ஆற்றியிருப்பதோடு, சிறுகதைத் திறனாய்வுகள், பட்டறைகளையும் நடத்தியிருப்பவர் இராமகிருஷ்ணன்.

#TamilSchoolmychoice

பல திரைப்படங்களிலும் அவர் வசனகர்த்தாவாகவும், திரைப்படக் கதாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.

இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும் பயணம் செய்து, அது குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் வாசகர்களிடையே பிரபலமானவை.

சாகித்திய அகாடமி என்பது ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், விருதுக்கான பட்டயமும் வழங்கப்படுவதாகும். இந்தியாவின் 24 மொழிகளில் அந்தந்த மொழிகளுக்கு ஒருவர் வீதம் சிறந்த இலக்கியப் படைப்புகளை வழங்கியவர்களுக்கு இந்த விருது சாகித்திய அகாடமி என்னும் மத்திய அரசாங்க ஆதரவு பெற்ற அமைப்பால் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டில் ‘சஞ்சாரம்’ என்னும் நாவலை எழுதியதற்காக இராமகிருஷ்ணனுக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்படுகிறது.