Home வாழ் நலம் மார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளம் பழம்!

மார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளம் பழம்!

677
0
SHARE
Ad

pomegranate-2ஜனவரி 13 – மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று சுவைகள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு ரக  மாதுளை பழங்களில் அதிக அளவு சக்தி உள்ளது.

மாதுளையின் பழம், பூ, பட்டை ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. இரும்பு, சர்க்கரை,  சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

இப்பழத்தை சாப்பிடுவதால் உடலில் நோய்  எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது.

#TamilSchoolmychoice

இனிப்பு மாதுளம்  பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. புளிப்பு மாதுளை வயிற்று கடுப்பை நீக்குகிறது. ரத்த வயிற்றுப்போக்கிற்கு  சிறந்த மருந்தாக விளங்குகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது.

pomegranates,பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. இதய நோய்கள், இதய பலகீனம் போன்றவை குணமாகும். ரத்தத்தை அதிகரிக்கும். தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம்  அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும்.

தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை  உண்டாக்குகிறது. ஆண்மையை அதிகரிக்கிறது.
மாதுளம் முத்துக்களில் சிறிதளவு மிளகுப் பொடியும் சேர்த்துச் சாப்பிட்டால்  அனைத்து வகையான பித்த நோய்களும் தீரும்.

மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம்  உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல்சூடு நீங்கும். உடல்  குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.

-pomegranatesமாதுளம் பூக்களுடன் அருகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம் ஆகியவற்றை சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்து 30 மில்லி எடுத்துக்கொண்டு அதில் பசு  வெண்ணெய் சேர்த்து கலக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும்.

மாதுளம்பூச்சாறு 300 கிராம்  சேகரித்து 200 கிராம் பசு நெய் சேர்த்து பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை,  மாலை சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து மூலநோயும் விலகும்.