Home கலை உலகம் பார்வை : சீகா விழா : கொஞ்சம் விருதுகள்! நட்சத்திரக் குவியல் நிகழ்ச்சிகள் நிறைய!

பார்வை : சீகா விழா : கொஞ்சம் விருதுகள்! நட்சத்திரக் குவியல் நிகழ்ச்சிகள் நிறைய!

709
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 13 – கடந்த சனிக்கிழமை ஜனவரி 10ஆம் தேதி கோலாலம்பூர் நெகாரா உள்அரங்கில் கோலாகலமாக நடைபெற்ற சீகா எனப்படும் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விருதுகள் வழங்கும் விழா பின்னிரவு 1.00 மணி வரை நீண்டாலும், நட்சத்திரக் குவியலாக அரங்கை வண்ணமயமாக்கிய தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்களால் களை கட்டியது.

IMG_6718

கமலஹாசனுக்கு விண்மீன் எச்டி விருது வழங்கும் அஸ்ட்ரோவின் டாக்டர் ராஜாமணி – அருகில் அஸ்ட்ரோ இந்தியப் பிரிவு பொறுப்பாளர் முருகையா

#TamilSchoolmychoice

கமலஹாசன் வருகை என்பதாலோ என்னவோ அரங்கம் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. முன்னறிவிப்பு இல்லாமல் பல முன்னணிக் கலைஞர்கள் வருகை தந்து ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதோடு, மேடையில் சில நிமிடங்கள் தங்களின் திறனைக் காட்டியும், உரையாற்றியும், ரசிகர்களுக்கு ஏமாற்றம் தராமல், உற்சாகத்தை ஊட்டினர்.

விருதுகள் அறிவிப்பில் குழப்பங்கள் 

இருப்பினும், நடைபெற்ற நிகழ்ச்சிகள் யாவும், தொலைக்காட்சி ரசிகர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சி போன்றுதான் இருந்ததே தவிர, உண்மையிலேயே விருதுகள் வழங்குவதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி போன்று தெரியவில்லை.

IMG_6838

அறிவிப்பாளர் பிரித்விராஜ், விக்ரம், இயக்குநர் விக்கிரமன்…

பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும் என இதற்கு முன் பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் இயக்குநர் செல்வமணி கூறியிருந்தாலும், நிகழ்ச்சியன்று நள்ளிரவு பன்னிரண்டு வாக்கில்கூட பல பிரிவுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்படவே இல்லை. விருதுகள் வழங்கப்படும் போது எந்தப் படத்திற்கு என்ற அறிவிப்போ, அந்த விருதைப் பெறும் கலைஞர் அல்லது படத்தைப் பற்றிய காணொளியோ (வீடியோ) திரையில் காட்டப்படவில்லை.

தனுஷ் மேடைக்கு அழைக்கப்பட்டு சிறந்த நடிகருக்கான விருது என்று அறிவிக்கப்பட அவரே குழம்பிப் போய் மேடையிலேயே, இது எந்த படத்திற்கு என்று தயக்கச் சிரிப்புடன் கேட்டது ஓர் உதாரணம்!

IMG_6522

சிறந்த நகைச்சுவை நடிகை விருதை மதுமிதாவுக்கு வழங்கிய துணையமைச்சர் டத்தோ சரவணன், அருகில் டத்தோ டி.மோகன்

ஏராளமான சின்னத்திரை நட்சத்திரங்கள் வருகை தந்திருந்தாலும் நள்ளிரவு பன்னிரண்டு மணி வரை அவர்களுக்கான விருதுகள் வழங்கப்படவே இல்லை. அதன் பின்னரே சில பிரிவுகளில் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியை ஒளிபரப்புக்காக குத்தகைக்கு எடுத்திருந்த சன் தொலைக்காட்சியின் ஆதிக்கமே எங்கும் நிறைந்து வழிந்தது. ரெட் கார்ப்பெட் எனப்படும் கலைஞர்கள் வருகை சிவப்புக் கம்பள வரவேற்புப் பகுதியில் உள்நாட்டுப் புகைப்படக் கலைஞர்களையும், பத்திரிக்கையாளர்களையும் நெருங்கவே விடவில்லை.

கடந்த ஒரு மாதமாக சீகா நிகழ்ச்சியைப் பற்றி நல்லவிதமாக உள்நாட்டுப் பத்திரிக்கைகளிலும், தகவல் ஊடகங்களிலும் எழுதி, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்து, அவர்களை ஆயிரக்கணக்கில் அரங்கினுக்குள் கொண்டு வந்து சேர்த்த உள்நாட்டுத் தகவல் ஊடகங்களை, நிகழ்ச்சி நடைபெறும் அன்று மட்டும் சினிமாக் கலைஞர்களை நெருங்கவிடாமல் தடைபோட்டது நியாயமா?

அடுத்த முறை ஏற்பாட்டாளர்கள் இதுபோன்ற குறைகளை நிவர்த்திப்பது நல்லது.

IMG_6512

சத்யராஜூக்கு சிறந்த குணசித்திர நடிகர் விருது

விருதுகள் வழங்கப்பட்டதில் பல முரண்பாடுகள் இருந்தன. சீகா விருதுகள் விழா 2015 என அரங்கம் முழுக்க பதாகைகள், விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், கொடுக்கும் போது சில விருதுகள் 2014க்கு என்றும் சில விருதுகள் 2013க்கு என்றும் பிரித்துக் கொடுத்தார்கள். சில விருதுகள் 2014க்கு மட்டுமே கொடுக்கப்பட்டன.

வந்துவிட்ட கலைஞர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இது போன்று விருதுகள் பிரித்துக் கொடுக்கப்பட்டது போல் தோன்றியது.

ஒரு ‘மைக்’கை அறிவிப்பாளரிடம் கொடுப்பதும் பின்னர் திரும்ப வாங்கிச் செல்வதுமாக ஒரு மஞ்சள் சேலை பெண்மணி சுமார் 50 முறையாவது மேடையில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தது கண்ணை உறுத்திய மற்றொரு ஏற்பாட்டுக் குறை.

கமலஹாசன் வருகை – வாழ்நாள் சாதனையாளர் விருதுகள்

நிகழ்ச்சிக்கு வருகை தந்து சுமார் இரண்டு மணி நேரம் இருந்து, மேடையிலும் ஏறி கலகலப்பூட்டினார் கமலஹாசன். அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

அதோடு, அஸ்ட்ரோ சார்பில் விண்மீன் எச்டி சிறப்பு விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

தெலுங்குப் படவுலகின் முன்னணி நட்சத்திரமும், மறைந்த என்.டி.ராமராவ் மகனுமான பாலகிருஷ்ணாவுக்கு, லெஜண்ட் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, தெலுங்குப் படவுலகின் முன்னணி ஹீரோ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

IMG_6534

கன்னட நடிகர் அம்பரீஷூக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் சரத்குமார், நடிகர் பாலகிருஷ்ணா

அவரும் தமிழிலேயே உரையாடி ரசிகர்களை மகிழ்வித்தார். “எங்கள் அப்பா என்.டி.ராமராவ், இது தமிழ் நாட்டு தண்ணி குடிச்சு வளர்ந்த உடம்பு என்று பெருமையாகக் கூறுவார். நானும் தமிழ்நாட்டில்தான் பிறந்தேன். இப்போது சினிமாவுக்கு ஹைதராபாத்தில் தஞ்சமடைந்திருக்கின்றேன்” என்று கூறி நெகிழ்ந்தார் பாலகிருஷ்ணா. அண்மையில் வெளிவந்த ஸ்ரீ ராம ராஜ்ஜியம் தமிழ்/தெலுங்கு இரு மொழி படத்தில் நயன்தாரா சீதையாக நடிக்க ராமராக நடித்திருந்தார் பாலகிருஷ்ணா.

கன்னட திரைப்பட உலகின் அந்தக் கால ஹீரோ நடிகர் அம்பரீஷூக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

பிரபல இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேடையில் தனது ‘ஏதோ ஒரு பாட்டு காதில் கேட்கும்’ என்ற பாடலைப் பாடினார் ராஜ்குமார்.

IMG_6320

அஞ்சலிக்கு விருது வழங்கும் சுமலதா, சுகாசினி

 நட்சத்திரக் குவியலாக முன்னணிக் கலைஞர்கள்

நிகழ்ச்சி ஏழு மணியளவிலேயே தொடங்கப்பட்டுவிட்டது ரசிகர்களுக்கு எதிர்பாராத ஆச்சரியம். நிகழ்ச்சி அறிவிப்பாளர்களாக “வாணி ராணி” புகழ் பிரித்திவிராஜூம், தொலைக்காட்சி அறிவிப்பாளர் நட்சத்திராவும் சிறப்பாக வழிநடத்தினார்.

IMG_6337

சிறப்பாக அறிவிப்பு பணிகள் மேற்கொண்ட அறிவிப்பாளர்கள் பிரித்திவிராஜ் மற்றும் நட்சத்திரா

இடையிடையே மனோ பாலாவும் அறிவிப்பாளராக சேர்ந்து கொண்டார்.

சீகா விருது வழங்கும் விழாவில், கணீர்க் குரலில் அழகு கொஞ்சும் தமிழில் அற்புதமான வர்ணனைகளோடு முன்னுரை வழங்கினார் ஜோ மல்லூரி. கும்கி படத்தில் இலட்சுமியின் தந்தையாக வந்து நடிப்பிலும் கலக்கியவர் இவர்.

IMG_6810

சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை சூரிக்கு வழங்கும் சிவகார்த்திகேயன்

கானா பாலா, தனது புகழ்பெற்ற பாடல்களில் சிலவற்றை வரிசையாகப் பாடி மகிழ்வித்தார். பாடகர் கிரீஷும் சில பாடல்கள் பாடினார