பெங்களூரு, ஜனவரி 13 – அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான இறுதிவாதம் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் இறுதிவாதம் தொடங்கியது.
ஜெயலலிதா தரப்பில் டெல்லியை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் நாகேஷ்வரராவ் ஆஜராகி இறுதிவாதத்தை தொடங்கியுள்ளார். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முன் இன்று 6-வது நாளாக இறுதிவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த இறுதிவாதம் 7 முதல் 10 நாட்கள் வரை நடைபெறும் என்று எதிபார்க்கப்படுகறது. அதேபோல அந்த வழக்கில் மீதம் உள்ள குற்றவாளிகளான சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் இறுதிவாதங்களும் ஒன்றன் பின் ஒன்றாக இந்த மாதம் முழுவதும் நடைபெற்று முடிவு பெறும் என்று எதிபார்க்கப்படுகிறது.
இந்த வழக்கு கடந்த வாரம் திங்கட்கிழமை முதன்முதலாக விசாரணைக்கு வந்த போது ஜெயலலிதா வழக்கறிஞர் குமார் இந்த வழக்கை 12-ஆம் தேதி வரை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.
மேலும் அப்போது தான் மூத்த வழக்கறிஞர் இறுதிவாதத்தை தொடங்க முடியும் என்ற கோரிக்கை ஜெயலலிதா வழக்கறிஞர் குமார் வைத்தார்.
நீதிபதி எக்காரணத்தை கொண்டும் இந்த வழக்கை ஒத்திவைக்க முடியாது உங்களது மூத்த வழக்கறிஞர் ஆஜராகும் வரை இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை படித்து இந்த வழக்கின் தன்மையை புரிந்து கொள்ள உதவும் என்று நீதிபதி அறிவுறுத்தினார்.
கடந்த ஒருவாரமாக ஜெயலலிதா வழக்கறிஞர் குமார் குற்றப்பத்திகையில் உள்ள முக்கிய அம்சங்களை வாசித்தார். இன்று இறுதிவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.