Home கலை உலகம் இயக்குநர் மணிரத்னம் மீது போலீஸில் புகார்

இயக்குநர் மணிரத்னம் மீது போலீஸில் புகார்

662
0
SHARE
Ad

mani-sliderசென்னை, பிப்.28- இயக்குநர் மணிரத்னம் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விநியோகஸ்தர் புகார் கொடுத்துள்ளார்.

கடல் திரைப்பட விவகாரம் தொடர்பாக அடையாளம் தெரியாத சிலர் மிரட்டி வருகின்றனர். ஆகவே, எனது வீடு, அலுவலகம் மற்றும் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் மணிரத்னம் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மணிரத்னத்தின் அலுவலகத்தில் 2 போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, விசாரணையை ஒரு நாள் ஒத்தி வைத்தார்.

#TamilSchoolmychoice

மணிரத்னம் மீது போலீஸில் புகார்

இதற்கிடையே, இயக்குநர் மணிரத்னம் மீது கடல் படத்தின் விநியோகஸ்தர் டி. கண்ணன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய படம் கடல். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த படத்தால் ஏற்பட்ட இழப்பை இயக்குநர் மணிரத்னம் கொடுக்கவேண்டும் என்று கூறி அதன் விநியோகஸ்தர் டி. கண்ணன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை புகார் அளித்தார்.

புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது:-

கடல் படத்தை ரூ. 16 கோடிக்கு வாங்கினேன். ஆனால் படம் ரூ. 3 கோடியை மட்டுமே வசூலித்தது. இதன் மூலம் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மணிரத்னம் மற்றும் அவர் தரப்பு மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.

அந்த புகார் மனுவில் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி, அவருடைய மேலாளர் கிருஷ்ணா ஆகியோரது பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.