Home உலகம் பிணைக் கைதிகளைக் கொல்லும் ஐஎஸ்ஐஎஸ் சிறுவன்! (காணொளி)

பிணைக் கைதிகளைக் கொல்லும் ஐஎஸ்ஐஎஸ் சிறுவன்! (காணொளி)

505
0
SHARE
Ad

child-soldiers-1.w529.h352மாஸ்கோ, ஜனவரி 16 – ஈராக் மற்றும் சிரியாவின் முக்கிய பகுதிகளை இணைத்து இஸ்லாமிய நாடாக பிரகடனப்படுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், தங்களிடம் பிடிபட்ட இரு ரஷ்ய உளவாளிகளை 10 வயது சிறுவனை வைத்து சுட்டுக் கொல்லும் காணொளியை தங்கள் அதிகாரபூர்வ ஊடகமான அல் ஹயாத்தில் வெளியிட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் வெளியிடபட்ட பிரசார காணொளியில், அவர்கள் சிறுவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கும் காட்சி இடம்பெற்று இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தீவிரவாதிகள் சமீபத்தில் தங்களிடம் பிடிபட்ட ரஷ்ய உளவாளிகள் இரண்டு பேரை சிறுவன் ஒருவனைக் கொண்டு துப்பாக்கியால் சுட வைப்பது போன்று காணொளியை வெளியிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

isis-child-soldierஅந்தக் காணொளியில், சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன், மண்டியிட்டு இருக்கும் இருவரை, தீவிரவாதியின் உத்தரவிற்கு இணங்க, கொடூரமாக துப்பாக்கியால் சுட்டு கொல்கிறான்.

கொல்லப்பட்ட இரு பிணையக் கைதிகளும், ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. எனினும், ஐஎஸ்ஐஎஸ் வெளியிட்ட இந்த காணொளி, உலக நாடுகளை மிரட்டுவதற்காக போலியாக தயாரிக்கப்பட்டது என ஒருசாரார் கூறி வருகின்றனர்.

குறிப்பிட்ட அந்த காணொளியை கீழே காண்க: