இந்த கலவரத்தில், அப்போதைய குஜராத் முதல்வரும், தற்போதைய பிரதமருமான நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. மேலும், நரேந்திர மோடிக்கு விசா வழங்கவும் அமெரிக்கா மறுத்து வந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி மீதான வழக்கை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனாலிசா டோரஸ், நட்புறவை பேணும் ஒரு சிறந்த அண்டை நாட்டு தலைவர் மோடி.
இந்த வழக்கில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
Comments